»   »  சோஷியல் மீடியாவில் பிரபலமான ஸ்டார் யார் தெரியுமா?

சோஷியல் மீடியாவில் பிரபலமான ஸ்டார் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்றவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஐஸ்வர்யா ராயை அடுத்து ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக உள்ளார் பிரியங்கா.

Priyanka Chopra declared world's most popular actor on social media

பே வாட்ச் படத்தில் நடித்த அவருக்கு மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் எந்தெந்த திரையுலக பிரபலங்கள் பிரபலமாக உள்ளார்கள் என்பதை சோஷியல் மீடியா அனாலைடிக்ஸ் நிறுவனமான எம்.வி.பி. இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இரண்டாவது இடத்தில் ஹாலிவுட் நடிகர் ராக் எனப்படும் ட்வெய்ன் ஜான்சன் உள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்களான கெவின் ஹார்ட், கேடாட், கேரா டெலவிஞ்ச், வின் டீஸல், ஜெனிபர் லோபஸ், ஆஷ்லி பென்சன், ஜாக் எப்ரான், ஷே மிட்சல் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

English summary
Priyanka Chopra is more popular than her ‘Baywatch’ co-star Dwayne Johnson and even ‘Wonder Woman’ Gal Gadot on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil