»   »  பிரியங்கா சோப்ரா ரொம்ப ஆபத்தானவர்: சொல்கிறார் ஹாலிவுட் நடிகர் ராக்

பிரியங்கா சோப்ரா ரொம்ப ஆபத்தானவர்: சொல்கிறார் ஹாலிவுட் நடிகர் ராக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பே வாட்ச் ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா ஆபத்தானவர் என்று ஹீரோ ட்வெயின் ஜான்சான் அதாங்க பிரபல குத்துச் சண்டை வீரர் ராக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் குவான்டிகோ என்ற தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஒரு இந்திய பெண் ஹாலிவுட் டிவி தொடரில் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும் ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்க வருமாறு பிரியங்காவை அழைத்துள்ளனர்.

பே வாட்ச்

பே வாட்ச்

ஹாலிவுட் டிவி தொடர் மூலம் அமெரிக்கர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா தற்போது ராக் நடிக்கும் பே வாட்ச் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளார்.

வில்லி

பிரியங்கா மிகவும் கூல் ஆனவர். ஆனால் வில்லியாக இன்னும் சிறப்பாக உள்ளார். காத்திருக்க முடியவில்லை என்று ராக் ட்வீட் செய்துள்ளார்.

பிரியங்கா

இந்தியாவின் மிகப் பெரிய நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை பாருங்கள். பே வாட்ச் படத்திற்கு வரவேற்கிறேன் என்று கூறி ராக் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரியங்கா ஆபத்தான வில்லி என்கிறார் ராக்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அடுத்தடுத்து ஹாலிவுட்டில் வாய்ப்புகள் வருவதை நினைத்து பிரியங்கா மகிழ்ச்சியில் உள்ளார். பிற நடிகைகளும் ஹாலிவுட் சென்றாலும் பிரியங்காவுக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Rock aka Dwayne Johnson, has confirmed that Priyanka Chopra is all set to make her Hollywood debut in Baywatch and posted a short video clip on Instagram along with Priyanka Chopra at the beach. Rock says his villain Priyanka is dangerous.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil