»   »  ஆசியாவின் கவர்ச்சிப் பெண் டைட்டில்: தீபிகாவை தோற்கடித்த ப்ரியங்கா, டிவி நடிகை

ஆசியாவின் கவர்ச்சிப் பெண் டைட்டில்: தீபிகாவை தோற்கடித்த ப்ரியங்கா, டிவி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆசியாவின் கவர்ச்சிப் பெண் டைட்டில்: தீபிகாவை தோற்கடித்த ப்ரியங்கா, டிவி நடிகை- வீடியோ

மும்பை: தீபிகா படுகோனேவை தோற்கடித்து ஆசியாவின் கவர்ச்சிப் பெண் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவர் 5வது முறையாக ஆசியாவின் கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

தீபிகா

தீபிகா

ஆசியாவின் கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த நடிகை தீபிகா படுகோனேவை ப்ரியங்கா சோப்ரா தோற்கடித்துள்ளார்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி

தொலைக்காட்சி நடிகையான நியா சர்மா இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார். தீபிகாவுக்கு 3வது இடமும், ஆலியா பட்டுக்கு 4வது இடமும், பாகிஸ்தானிய நடிகை மாஹிரா கானுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட்டில் அசத்தி வரும் ப்ரியங்கா சோப்ரா தன்னை ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாக தேர்வு செய்ததற்காக அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நியா சர்மா தீபிகாவை தோற்கடித்துள்ளார். ப்ரியங்காவின் பெயருக்கு அடுத்த இடத்தில் என் பெயரை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை என் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றி நியா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Priyanka Chopra has dethroned Deepika Padukone to become Asia's sexiest woman. Television actress Nia Sharma has got the second place while Deepika got third place only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil