»   »  உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை யார் தெரியுமா? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை யார் தெரியுமா? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கொலம்பியாவை சேர்ந்த சோபியா வெர்காரா முதலிடத்தில் உள்ளார்.

சோபியா தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சோபியா

சோபியா

1.6.2016 முதல் 1.6.2017 வரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் சோபியா 41.5 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார். சோபியா அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

கேலி

கேலி

சோபியாவை அடுத்து தி பிக் பாங் தியரி காமெடி தொடரில் நடித்து வரும் கேலி கூகோ இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 26 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற ப்ரியங்கா சோப்ரா குவான்டிகோ தொலைக்காட்சி தொடர் மூலம் அங்கு பிரபலமானார். அவருக்கு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 8வது இடம் கிடைத்துள்ளது.

இந்திய நடிகை

இந்திய நடிகை

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 10 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.

English summary
Actress Priyanka Chopra has been ranked eighth on Forbes magazine's list of World's Highest-Paid TV Actresses 2017, which is led by Modern Family star Sofia Vergara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil