தாமரைக்கு ரெட் கார்டு கொடுங்க.. கொதித்தெழுந்த பிரியங்கா ஆர்மியினர்.. கமல் என்ன செய்ய போகிறார்?
சென்னை: எப்படியோ இந்த சண்டைக்கு இந்த வெள்ளிக் கிழமையே தாமரை நல்ல சோறு ஆக்கிப் போட்டு பிரியங்காவை கரெக்ட் செய்து விடுவார்.
ஆனால், இன்று தாமரை மற்றும் பிரியங்கா இடையே நடந்த அடிதடி சண்டை பிரியங்கா ரசிகர்களை கொதித்தெழ செய்துள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுவனின் உயிர் காக்க உதவுங்கள்
பிரியங்காவின் நெஞ்சிலேயே தாமரை அடித்து விட்டார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே துரத்துங்க என பிரியங்காவின் ஆர்மியினர் தாமரைக்கு எதிராக பொங்கி உள்ளனர்.

தகராறு தாமரை
அப்பாவி, கிராமத்துப் பெண், ஏழைத் தாய் என போலியான கேடயங்களை பயன்படுத்திக் கொண்டு தாமரை இந்த கேமை ஆடி வருகிறார் என பிரியங்கா ரசிகர்கள் தாமரைக்கு எதிராக கொதித்து எழுந்து வருகின்றனர். பிரியங்காவை தாமரை அடித்தது தவறு என்றும் மோசமான வார்த்தைகளால் பேசி தாமரை தகராறு செய்கிறார் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அமீரை ஏன் தடுக்கல
இமான் அண்ணாச்சியிடம் அந்த அளவுக்கு வம்படியாக கம்பை பிடித்துக் கொண்டு போராடிய தாமரை பிரியங்காவை பிடித்து தள்ள முடிகிற தாமரையால் அமீர் முட்டையை உடைக்கும் போது ஏன் அப்படியே எதுவும் செய்யாமல் தடுக்காமல் நின்றார் என பிரியங்கா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூஞ்சை உடைச்சிடுவேன்
தாமரை பிரியங்காவிடம் எல்லை மீறி மோசமாக பேசியதெல்லாம் சரியா என பிரியங்கா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மூஞ்சை உடைச்சிடுவேன், நீயெல்லாம் ஒரு பொம்பளையா என அருவருக்கத்தக்க வார்த்தைகளை தாமரை பயன்படுத்தியது எவ்வாறு சரியான விஷயம் ஆகும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

யாருக்கு ரெட் கார்டு?
பிரியங்காவை தகாத முறையில் தாமரை தாக்கி விட்டார் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிரியங்கா ரசிகர்கள் பொங்கி வரும் நிலையில், தாமரை ரசிகர்கள் நிரூப்பை பிரியங்கா எப்படி இழுத்துப் போடுறாங்க பாருங்க முதல்ல அதுக்கு அவங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க சொல்லுங்க என்றும் இந்த போட்டியிலும் தாமரையை முதலில் தள்ளியது பிரியங்கா தான் என்றும் தாமரைக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

கமலுக்கு வேலை
இந்த வாரமாவது கமல் சாருக்கு போட்டியாளர்களை கண்டிக்கும் வேலை கிடைக்குமா? அல்லது வரும் வெள்ளிக் கிழமை எபிசோடிலேயே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தாமரையும் பிரியங்காவும் ஒன்று சேர்ந்து ரசிகர்களுக்கு அல்வா கொடுப்பார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











