அந்த பிரச்சனை தான் காரணமா? ராஜுவை டார்கெட் பண்ணும் பிரியங்கா.. தேவையில்லாமல் ஒரு சண்டை!

சென்னை: ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஒபி அடிக்கிறார் என அவருடன் சண்டைக்கு சென்றார் பிரியங்கா.

நேற்றைய எபிசோடில் தான் பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையே உள்ள பனிப்போரை தீர்த்து வைக்க பாடுபடுவதாக நடித்தார் பிரியங்கா.

இந்நிலையில், தற்போது ராஜுவை வேண்டும் என்றே தவறாக காட்ட வேண்டும் என்கிற நோக்கில் பிரியங்கா சண்டை போட்டதாக ராஜுவே கூறியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூங்கும் போது சண்டை

தூங்கும் போது சண்டை

பிக் பாஸ் வீட்டின் லைட் எல்லாம் ஆஃப் செய்து விட்டு படுக்கையில் அனைவரும் படுக்க சென்ற நிலையில், பிரச்சனையை ஆரம்பித்தார் பிரியங்கா. ராஜு சூப் குடித்த பவுலை கழுவ சொல்வது போல ஆரம்பித்த சண்டை ஏகப்பட்ட விஷயங்களை வெளிக் கொண்டு வந்தது.

ஒபி அடிக்கும் ராஜு

ஒபி அடிக்கும் ராஜு

பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு வேலையும் செய்யாமல் ராஜு ஜெயமோகன் இதுவரை ஒபி அடித்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் கேப்டன் பிரியங்கா. ராஜு அதனை மறுத்த பேச பிரியங்கா தொடர்ந்து வாய்ஸ் ரைஸ் பண்ணி ராஜு எந்த வேலையையும் செய்யவில்லை என கச்சேரி வைத்தார்.

டென்ஷனான ராஜு

டென்ஷனான ராஜு

பிரியங்கா தொடர்ந்து தன்னை தாக்கும் வகையில் பேசுவதை கண்டு ராஜு ஜெயமோகன் கொஞ்சம் டென்ஷன் ஆகி விட்டார். பாவனியிடம் சொன்னதை போலவே நான் எப்போதெல்லாம் வேலை செஞ்சேன்னு உங்கிட்ட சொல்லணுமா என கேட்டதும் பிரியங்கா சண்டையை பெரிதாக்கி விட்டார்.

அழுது புலம்பிய பிரியங்கா

அழுது புலம்பிய பிரியங்கா

இந்த வீட்டில் எவ்வளவோ பிரச்சனை நடந்தது அப்போதெல்லாம் அமைதியாக இருந்த நீ நான் கேட்டதும் என்னை கத்திட்டல என் கூட சண்டை போடுறல என இஷ்டத்துக்கு கத்தி சண்டையை போட்டு விட்டு கடைசியாக பிளேட்டை அப்படியே திருப்பி ராஜு சண்டை போட்டார் என பிரியங்கா பிராண்ட் பண்ணதை புரிந்து கொண்ட ராஜு கொஞ்சமும் கடுப்பாகாமல் என் மீது தான் தப்பு மன்னிச்சிடு என மன்னிப்பு கேட்டார்.

யாருமே கண்டுக்கல

யாருமே கண்டுக்கல

நாம இரண்டு பேரும் சண்டை போட்ட நிலையில் ஏன் யாருமே நம்மை சேர்த்து வைக்க முயற்சி செய்யவில்லை என மறுபடியும் பிரியங்கா ராஜுவிடம் அப்படியே பாவமான முகத்தை வைத்துக் கொண்டு கேட்டு நட்பானதை பார்த்த ரசிகர்கள் யப்பா இது உலக மகா நடிப்புடா சாமி. பிரியங்காவோட ரியல் கேரக்டர் என்னன்னு புரியவே மாட்டேங்குதே என குழம்பி உள்ளனர்.

அதுதான் காரணமா

அதுதான் காரணமா

பாவனியுடன் ராஜுவை சேர்த்து வைக்க பிரியங்கா முயற்சி செய்தும் ராஜு அதற்கு மறுப்பு தெரிவித்தது தான் ராஜு மற்றும் பிரியங்கா இடையே இப்படியொரு சண்டை எழ காரணமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், எந்த நேரமும் சாப்பாட்டு தட்டுடன் இருக்கும் பிரியங்கா ராஜுவை பார்த்து வேலையே செய்வதில்லை என சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் என ராஜுவின் ஆர்மியினர் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.

பிரியங்கா பிரமாதம்

பிரியங்கா பிரமாதம்

பிரியங்கா மற்றும் பாவனி ஆர்மியினர் ராஜுவின் வேலை செய்யாத முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு விட்டார் பிரியங்கா. இதே போல ஒவ்வொருவரும் ராஜுவை காலி செய்தால் அடுத்த வாரமே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவார் என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X