Don't Miss!
- Finance
தமிழகம், தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் டாப் அச்சீவர்ஸ்.. நிதியமைச்சர் கொடுத்த சர்பிரைஸ்!
- Sports
இந்திய அணிக்கு புதிய பிரச்சினை.. அஸ்வின் - ஜடேஜாவால் வந்த தலைவலி.. முக்கிய முடிவை எடுக்கும் டிராவிட்
- News
மகாராஷ்டிராவில் ட்விஸ்ட்.. துணை முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. இது லிஸ்ட்லயே இல்லையே
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Lifestyle
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தனுஷுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்.. எந்தப் படத்துல தெரியுமா.. விரைவில் அறிவிப்பு!
சென்னை : நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் சூட்டிங்கில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
அடுத்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் தனுஷ். இந்தப்படம் பீரியட் படமாக எடுக்கப்பட உள்ளது.
The Gray Man Trailer: ஒரு ஷாட்னாலும் தனுஷ் தரமான செய்கை.. வெளியானது தி கிரே மேன் டிரைலர்!

பிசியான தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட்டின் முன்னணி மற்றும் பிசியான நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் ஓடிடியில் ரிலீசானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் தனுஷிற்கு ஏற்பட்டுள்ளது.

தி க்ரே மேன் ஹாலிவுட் படம்
சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். இவர் கோலிவுட் என்ற ஒரு வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் தன்னுடைய நடிப்புப் பயணத்தை ஹாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளார். அடுத்ததாக ஜூலை 22ல் இவரது தி க்ரே மேன் ஹாலிவுட் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியானது.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்
முன்னதாக தனுஷின் போஸ்டரும் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக இவரது கர்ணன், ஜகமே தந்திரம், மாறன், அட்ராங்கி ரே ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் நேரடியாக ரிலீசான நிலையில், அடுத்ததாக திரையரங்குகளில் இவரது திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாக உள்ளது.

விரைவில் திருச்சிற்றம்பலம் ரிலீஸ்
இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அவரது பிறந்தநாளையொட்டி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்
தற்போது நானே வருவேன் படத்தின் சூட்டிங்கையும் முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் சூட்டிங்கில் தற்போது மும்முரமாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணையவுள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பு
1930களின் நடக்கும் நிகழ்ச்சியை கதைக்கருவாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது. பான் இந்தியா படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும்வகையில் பிரம்மாண்டமான வகையிலும் படம் எடுக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனுஷிற்கு ஜோடி பிரியங்கா மோகன்?
படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட உள்ளதாகவும் அவரது படங்களில் காணப்படும் டார்க் காமெடியும் படத்தில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழில் 4வது படம்
ஹீரோயின் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் மற்றும் டான் படங்களிலும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக தனுஷுடன் இணைவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.