அம்மாவிடம் நிரூப்பை மாட்டி விட்ட பிரியங்கா.. வேறு வழியில்லாமல் ஃபிரண்ட் ஆன நிரூப்.. வருண் எங்கடா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பிரியங்காவின் பெரிய புராணம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய இரண்டாவது புரமோவிலேயே பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வருவதை காட்டிய நிலையில், மூன்றாவது புரமோவிலும் அவர்களே இடம்பெற்றுள்ளனர்.

வருண், அமீர், சஞ்சீவ் மற்றும் தாமரையின் குடும்பங்கள் எங்கே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

81வது நாள்

81வது நாள்

பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா இருக்கோ இல்லையோ 81வது நாளை வெற்றிகரமாக கடந்து விட்டது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பமும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து செல்லும் காட்சிகள் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறதோ இல்லையோ வீட்டுக்குள் இத்தனை நாள் அடைந்து கிடக்கும் போட்டியாளர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது.

பிரியங்காவின் அம்மா

பிரியங்காவின் அம்மா

அக்‌ஷரா முதல் ராஜு குடும்பம் உள்ளே நுழைந்தது வரை அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த பிரியங்கா தனது அம்மா வந்ததும் அப்படியே அடங்கி ஒடுங்கி போயுள்ளார். பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காட்சிகள் இரண்டாவது புரமோவில் வெளியான நிலையில், 3வது புரமோவிலும் பிரியங்கா அம்மா மற்றும் சகோதர் நிரூப் உடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டுக் கொடுத்த பிரியங்கா

போட்டுக் கொடுத்த பிரியங்கா

ஸ்கூல் பசங்க கம்ப்ளைண்ட் செய்வது போல தனது அம்மாவிடம் இவன் கூட மட்டும் தான் மா சண்டை என பிரியங்கா போட்டுக் கொடுக்க நிரூப்பை அழைத்து கனிவாக பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் பேசும் காட்சிகள் மூன்றாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

பிரண்ட்ஷிப் எல்லாம் வெளியே

பிரண்ட்ஷிப் எல்லாம் வெளியே

நிரூப்பிடம் பிரியங்காவின் அம்மா பிரண்ட்ஷிப் எல்லாம் அவுட்சைட் வந்து பார்த்துக்கலாம். இங்கே உள்ளே போட்டி போட்டு விளையாடுங்க என சூப்பரான அட்வைஸ் கொடுத்துள்ளார். இதுவரை நீங்கள் இருவரும் போட்டிகளில் அப்படித்தான் விளையாடி வருகிறீர்கள் அதையே கடைபிடியுங்கள் என பிரியங்காவின் பிரதரும் அதே கருத்தை வழி மொழிந்துள்ளார்.

பிரண்ட்ஸ்

பிரண்ட்ஸ்

அம்மா மற்றும் சகோதர் முன்பாக பிரியங்கா தனக்கும் நிரூப்புக்கும் சண்டை என சொல்லிய நிலையில், பழசை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நிரூப் பிரண்ட்ஸ் என பிரியங்காவுக்கு கை கொடுக்க எந்தவொரு உணர்ச்சியும் மகிழ்ச்சியும் இல்லாத நபர் போல பிரியங்கா கை கொடுப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 23rd December 2021 - Promo 3 | Niroop-பை நிற்கவைத்து கேள்வி கேட்ட Priyanka தம்பி
வருண் எங்கடா

வருண் எங்கடா

மூன்றாவது புரமோவிலும் மீண்டும் பிரியங்காவின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். டிசம்பர் 22ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய வருணின் குடும்பம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த புரமோவை ஏன் போடவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சஞ்சீவ், தாமரை, அமீர் குடும்பத்தினரை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X