Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமல் சார் ஹின்ட் கொடுத்தார்... வாய் தவறி உண்மையை உளறிய பிரியங்கா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 50 வது நாளை எட்டி உள்ளது. இந்த சீசனில் அதிகம் அறிமுகம் இல்லாத நபர்கள் பலரே போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், எலிமினேஷன் மூலம் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியின் 21 ம் நாளில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47 வது நாளில் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். இதனால் போட்டியாளர்கள் எண்ணிக்கை 13 ஆனது. இந்நிலையில் ஏழாவது வாரத்தின் இறுதி நாளான நேற்று, இசைவாணி நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டார்.
வளைச்சு வளைச்சு நாமினேஷன் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.. கன்ஃபென்ஷன் ரூமில் கதறும் தாமரை.. பிக்பாஸ் புரமோ!

இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரி
தற்போது 12 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில், 50 வது நாளான இன்று இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக மற்றொரு பிரபலம் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வரிசைப்படுத்தி காப்பாற்றிய கமல்
இந்நிலையில் நேற்று வித்தியாசமான முறையில் வரிசைப்படுத்தி, யாரெல்லாம் காப்பாற்றப்பட போகிறார்கள் என்பதை அபிஷேக்கை வைத்து அறிவித்தார் கமல். இதனால் யாருக்கு அதிக ஓட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பது போட்டியாளர்களுக்கு ஹின்ட் கொடுப்பதை போல் உள்ளதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். எதற்காக கமல் இப்படி வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு காப்பாற்றி உள்ளனர் என தெரியாமல் பலர் குழம்பிப் போய் உள்ளனர்.

ஆறுதல் சொன்ன பிரியங்கா
இதற்கிடையில் இசைவாணி வெளியேறிய போது பாவ்னி கண்கலங்கி அழுதார். அவருடன் நெருக்கமாக இருந்த சுருதி, மதுமிதா, இசைவாணி என ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருவதால் பாவ்னி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதற்கு முன்பே நேற்று பிரியங்கா, பாவ்னியை கட்டிப்பிடிப்பு தேற்றினார்.

கமல் ஹின்ட் கொடுத்தார்
ஆறுதல் கூறுவதற்காக பேச துவங்கிய பிரியங்கா, கமல் சார் ஒவ்வொரு வாரமும் மேட்டிவேட் செய்து கொண்டிருக்கிறார். அவள் ஒரு விஷயத்தை செய்யாமல் தயங்கி நின்றாள் இல்லையா. அது தான் அவள் வெளியேறுவதற்கு காரணம். இதை தான், கமான் நன்றாக விளையாடுங்கள் என உற்சாகப்படுத்தி, கமல் சார் பேசி வருகிறார். கமல் சார் ஹின்ட் கொடுத்து வருவது இதைத் தான் என்கிறார்.

ஓப்பனாக பேசிய பிரியங்கா
ஏற்கனவே நெட்டிசன்கள் கமல் சார் ஹின்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறாரா, பிக்பாஸ் ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி தானா என சந்தேகம் கிளப்பி வரும் நிலையில், பிரியங்காவே ஓப்பனாக கமல் சார் ஹின்ட் கொடுக்கிறார் என பேசியது பலரையும் அதிர வைத்துள்ளது.

பிரியங்காவே சொல்லிட்டாரே
மற்றவர் யாராவது பேசி இருந்தால் கூட பரவாயில்லை, விஜய் டிவி.,யின் முன்னணி தொகுப்பாளினியும், பிக்பாஸ் சீசன் 5 ன் முக்கிய போட்டியாளருமான பிரியங்காவே பேசி உள்ளார். அப்படியானால் அது உண்மையாக தானே இருக்கும் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.