உருவானது குரூப்பிசம்...ஓப்பனாக பேசிய பிரியங்கா...கவுன்ட்டர் கொடுத்த நிரூப்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டாவது துவங்கி உள்ளது. முதல் வாரத்திலேயே அனைவரின் மனதையும் கவர்ந்த நளீதா மாரிமுத்து, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறியதற்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் நடத்தப்பட்டு, பிக்பாஸ் சீசன் 5 ன் முதல் தலைவராக தாமரை தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோசஸ் துவங்கியது.

குரூப் உருவாகிடுச்சு

குரூப் உருவாகிடுச்சு

நாமினேஷன் துவங்குவதற்கு முன்பே வீட்டிற்குள் குரூப்பிசம் உருவாகி விட்டது. இதனை இன்று வெளியான ப்ரோமோவில் பிரியங்கா வெளிப்படையாக பேசி உள்ளார். இன்றைய அபிசோடிற்கான ப்ரோமோவில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓப்பனாக பேசிய பிரியங்கா

ஓப்பனாக பேசிய பிரியங்கா

அப்போது பிரியங்கா, நாம் இந்த கேங்கை வேண்டுமென்றே உருவாக்கவில்லை. மற்ற போட்டியாளர்கள் ஒதுங்கியதால் இந்த குரூப் தானாக உருவாகி விட்டது. நம்ம கேங்க் டிஸ்லைக் கொடுத்ததால் மற்றவர்கள் கடுப்பாகி உள்ளனர் என்கிறார். அப்போது அபிஷேக், பிரியங்கா தன்னிடம் கூடுதல் அன்பாக இருக்க வேண்டும் என அபினய் நினைக்கிறான். அது அவன் கண்களிலேயே நன்றாக தெரிகிறது என்கிறார்.

கவுன்ட்டர் கொடுத்த நிரூப்

கவுன்ட்டர் கொடுத்த நிரூப்

அதற்கு பிரியங்கா, பரவாயில்லை. எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை என்கிறார். அபிஷேக் இந்த ட்ரியோ டபுள் டமாக்காவாக மாறும் என்கிறார். அதற்கு நிரூப், அவன் கிளம்பிடுவான் அடுத்து என அபிஷேக்கிற்கு கவுன்ட்டர் கொடுக்கிறார். அபிஷேக், பிரியங்கா, நிரூப் மூவரும் ஒரு குரூப்பாக உருவாகி உள்ளனர்.

இத்தனை குரூப் இருக்கா

இத்தனை குரூப் இருக்கா

அதே போல் அபினய், வருண், சிபி ஆகியோர் தனி குரூப்பாக ஏற்கனவே மாறி உள்ளனர். அதே சமயம் இசைவாணி, மதுமிதா, சுருதி, பாவனி ஆகியோர் தனி குரூப்பாக உருவாகி உள்ளனர். அதே போல் இமான் அண்ணாச்சி, ராஜு, தாமரை போன்றோர் தனி குரூப்பாக உருவாகி உள்ளனர். நேற்று நடந்த தலைவர் தேர்விற்கான டாஸ்கில் நிரூப் நேர்மையாக விளையாடியது பலரையும் கவர்ந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள்

ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள்

இதனால் தற்போது நிரூப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு பெருக துவங்கி உள்ளது. அதே போல் அண்ணாச்சியின் பக்குவமான பேச்சு, பொறுமையான நடைமுறை பலரையும் கவர்ந்துள்ளது. பெண் போட்டியாளர்களில் பாவனியின் அமைதி சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X