»   »  சூர்யாவுக்கு ஜோடியாகும் ப்ரியங்கா சோப்ரா?

சூர்யாவுக்கு ஜோடியாகும் ப்ரியங்கா சோப்ரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

24 படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் புதிய படத்தை பிரபல தொழிலதிபர் நந்திதா சின்ஹா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளரை முடிவு செய்துவிட்டார். அவர்தான் நந்திதா சின்ஹா.

அறிவிப்பு

அறிவிப்பு

இதுகுறித்து நந்திதா சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எங்களுடைய டோட்டல் பிரசென்டேஷன் டிவைசஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

கூட்டாக

கூட்டாக

அதுமட்டுமல்லாமல், இப்படத்தை அவருடைய 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

தமிழ், தெலுங்கில் இப்படத்தை முதலில் எடுத்துவிட்டு, பிறகு இந்தியிலும் எடுக்கவுள்ளோம், என்று கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு

15 ஆண்டுகளுக்குப் பிறகு

ப்ரியங்கா சோப்ரா, ஏற்கெனவே தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தமிழன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா தமிழில் நடிக்கும் அடுத்த படம் இதுவாகும்.

மேலும் இரு படங்கள்

மேலும் இரு படங்கள்

ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும், பா.ரஞ்சித் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

English summary
The Producers of Surya's next trilingual movie have trying Priyanka Chopra on the board.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil