எனக்கு பெண் குழந்தை பிறந்தால் உன்னை போல் வளர்ப்பேன்...அக்ஷராவை புகழ்ந்த பிரியங்கா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் 84 வது நாளில் இன்று அக்ஷரா, வருண் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியேறும் சமயத்தில் தாமரை உள்ளிட்ட பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
முதல் முறையாக பிக்பாஸில் டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் புதிதாக இருந்தது. முதலில் வெளியேறுவதை நினைத்து அழுத அக்ஷரா, பிறகு சின்ன குழந்தை போல் வீட்டிற்கு செல்வது சந்தோஷமாக இருப்பதாக அனைவரிடமும் கூறி சென்றார்.

எனக்கு பெண் குழந்தை பிறந்தால்
அக்ஷரா கிளம்புவதற்கு முன் அவரை தனியாக அழைத்துச் சென்ற பிரியங்கா, எனக்கு பெண் குழந்தை பிறந்தால் உன்னை போல் தைரியமான பெண்ணாக வளர்ப்பேன். போட்டி என்று வந்தால் ஆண்களுக்கு இணையாக இறங்கி, அடித்து தூள் பண்ணுகிறாய். இப்படி தான் இருக்கனும் என கட்டிப்பிடித்து பாராட்டுகிறார்.

கண்ணுபட போகுது
தொடர்ந்து வெளியே வந்து அக்ஷரா மற்றும் வருணை வழியனுப்புகையில், நிஜமாகவே பிக்பாசில் முதல் முறையாக ஒரு ஆணும், பெண்ணும் சூப்பரான, அழகான நட்புடன் பழகியது, ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே வெளியேறுவது இது ரொம்ப பெருமையாக உள்ளது. உங்களை பார்க்கும் போது பொறாமையாக உள்ளது. வெளியே போய் பெரிய பூசனிக்காயை வைத்து சுற்றிப் போடுங்கள் என அவர்களின் நட்பையும் பாராட்டினார்.

வியக்க வைத்த பிரியங்கா
வீட்டிற்குள் இதுவரை ஒரு முறை கூட வருண் - அக்ஷராவின் நட்பை பெருமையாக பேசாத பிரியங்கா, இன்று அவர்கள் கிளம்பும் போது அவர்களின் நட்பு பற்றி பெருமையாக பேசியது பலருக்கும் வியப்பாக இருந்தது.

ஆறுதல் சொன்ன வருண்
கதறி அழுத தாமரையை பார்த்துக் கொள்ளும் படி பிரியங்காவிடம் சொன்னார். இன்னும் இரண்டு வாரங்கள் தான் நன்றாக விளையாடி விட்டு, வெளியே வா என தாமரைக்கும் வருண் ஆறுதல் கூறிவிட்டு செல்கிறார்.

ஒன்றாக மேடை ஏறாத நண்பர்கள்
ஒன்றாக வெளியேறியதால் வருண் மற்றும் அக்ஷரா ஒன்றாகவே மேடைக்கு வந்து கமலுடன் பேசுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதலில் அக்ஷராவை மட்டும் அழைத்த கமல், அவரிடம் பேசி அனுப்பி வைத்து விட்டு, பிறகு வருணை அழைத்து பேசினார்.


Click it and Unblock the Notifications











