பயப்படுற அளவுக்கு ஒண்ணும் ஆகல.. மருத்துவமனையில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு திரும்பிய பிரியங்கா!
சென்னை: ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே சீரியல் நடிகர்கள் வந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரியங்காவுக்கும் ராஜுவுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிரியங்காவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.
மருத்துவமனைக்கு பிரியங்காவை அனுப்பி வைத்த நிலையில், அவருக்கு என்ன ஆனதோ? இனி திரும்பி வருவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் புலம்பித் தவித்தனர்.
இந்நிலையில், எபிசோடின் இறுதியிலே பிரியங்கா திரும்பி வந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

நமீதா வெளியேற்றம்
அம்மனுக்கு விரதம் இருந்ததால் மயங்கி விழுந்து விட்டேன். அதனால், தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினேன் என பேட்டி ஒன்றில் நமீதா மாரிமுத்து கூறியிருந்தார். உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் ஏன் நமீதாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவில்லை என்றும் அவர் சொன்னது போல மயங்கி விழுந்து இருந்திருந்தால் அந்த காட்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் காட்டவில்லை என்கிற கேள்விகள் எழுந்தன. பிரியங்காவும் அதே போலவே வெளியேற்றப்பட்டு விட்டாரோ என ரசிகர்கள் சற்றே சந்தேகமடைந்தனர்.

பிரியங்கா இஸ் பேக்
மருத்துவமனைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரியங்கா மீண்டும் எபிசோடு முடியும் போது இரவு நேரத்தில் ரிட்டர்ன் ஆன காட்சியை நாளைக்கு போட்டுக் கொள்ளலாம் என விட்டு விடாமல் கடைசியில் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களின் சந்தேகங்களை பிக் பாஸ் டீம் போக்கி இருக்கிறது. பிரியங்காவை மீண்டும் பார்த்த பிறகு தான் பல பிகா ரசிகர்கள் நிம்மதியாக தூங்கவே சென்றனர்.

ஹோஸ்ட் பண்ணுவதில் பிரச்சனையா
ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே நடிகர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வருகின்றனர் என சொல்வதற்கு முன் வரை செம ஜாலியாக கன்ஃபெஷன் ரூமிற்கு சென்ற பிரியங்கா அவர்கள் வருகிறார்கள், அந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ண வேண்டும் என்று சொன்னதும் உடல் நிலை சரியில்லாமல் போனதால் வந்த சின்னத்திரை நடிகர்களில் யாரையாவது பார்க்கக் கூடாது என்பதற்காக பிரியங்கா வெளியேறினாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

ஃபினாலேவில் கலந்து கொள்வாரா
நரம்பில் திடீரென வலி ஏற்பட்டுள்ளதாக கூறி ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு சென்று வந்த பிரியங்கா பூரண குணமடைந்து ஃபினாலேவில் கலந்து கொள்வாரா? அல்லது நாளை வேறு விதமான ஸ்டண்ட் எதையாவது விஜய் டிவி செய்ய காத்திருக்கிறதா? என ரசிகர்கள் கடைசி நேர டிஆர்பிக்கு இரையாகி விட்டனர் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பக்கா டிராமா
ராஜு மட்டுமே பிரியங்கா அருகே இருந்து அவரை கவனித்துக் கொண்டார். உடை மாற்றும் அறையில் பிரியங்கா அழும் போது கூட தாமரை, சுருதி, பாவனி, அக்ஷரா மற்றும் நாடியா சங் என எந்தவொரு பெண் போட்டியாளர்களும் போய் பார்க்கவில்லை. அதே போல பிரியங்காவின் தம்பி அமீர், நண்பன் நிரூப் என யாருமே பிரியங்காவை கண்டுக்கவே இல்லையே ஏன் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
Recommended Video

பிரியங்கா ஃபினாலேவில் இருக்கணும்
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ் ஃபினாலேவில் பங்கேற்க வேண்டும் என்றும் அவருடைய உடல்நலனில் எந்தவொரு குறையும் ஏற்பட்டு விடக் கூடாது என்றும் பிரியங்கா ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











