பிரியங்காவை டிரோல் செய்ய வேண்டாம்....ரசிகர்களை எச்சரிக்கும் தம்பி

சென்னை : விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது கமல் தொ/கத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தற்போது 20 நாட்களை கடந்துள்ளது.

ஆரம்பத்தில் ஜாலியாக பேசி, ஃபன் செய்து ரசிகர்கள் மட்டுமின்றி, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரின் மனதையும் கவர்ந்தார் பிரியங்கா. அவரிடம் பேச அனைவரும் ஆசைப்படுவதாக அவரே ஆரம்பத்தில் ஒரு முறை சொல்லியிருந்தார். சமையல், பேச்சு என அனைத்திலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

நாமினேட் ஆன பிரியங்கா

நாமினேட் ஆன பிரியங்கா


ஆனால் குரூப்பிசம் துவங்கிய பிறகு பிரியங்காவின் செயல்பாடுகள் முற்றிலும் மாறி விட்டன. கமலிடம் ஒரு மாதிரியாகவும், தனது நண்பர்களிடம் தனியாக பேசும் போது வேறு விதமாகவும் பேசி வருகிறார். இதனால் இந்த வாரம் வீட்டில் உள்ள அதிகமானவர்களால் பிரியங்கா நாமினேட் செய்யப்பட்டார்.

பிரியங்காவை கண்டித்த கமல்

பிரியங்காவை கண்டித்த கமல்

நேற்றைய வார இறுதி எபிசோடிலும் அபிஷேக், நிரூப் ஆகியோருடனான குரூப்பிசம் பற்றி பிரியங்காவிடம் கேள்வி கேட்டு வருத்தெடுத்தார் கமல். கையில் எழுதி காட்டுவது, பகலில் தூங்குவது போன்றவற்றிற்காக கமல், பிரியங்காவை கண்டிக்கவும் செய்தார். இதனை முதலில் சமாளித்தாலும், பிறகு தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு, இனி செய்ய மாட்டேன் என்றார்.

டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் துவங்கிய போது பிரியங்கா ஃபேன்ஸ் அதிகம் இருந்தனர். ஆனால் தற்போது Haters தான் பிரியங்காவிற்கு அதிகம் உள்ளனர். சோஷியல் மீடியாவில் பிரியங்காவை கண்டபடி டிரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் கோபமான பிரியங்காவின் தம்பி ரோஹித் தேஷ்பாண்டே, டிரோல் செய்ய வேண்டாம் என ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

ஏன் இவ்வளவு வெறுப்பு

ஏன் இவ்வளவு வெறுப்பு

சோஷியல் மீடியாவில் அவர் எழுதி உள்ள பதிவில், பிரியங்கா மீது ஏன் இந்த வெறுப்பு?. இது ஒரு கேம் ஷோ. பிக்பாஸ் 5 ஷோவில் பிரியங்கா நிச்சயம் உங்களை ஏமாற்றா மாட்டார். உண்மையான ரசிகர்களை கொண்டிருப்பதற்காக அவள் பெருமையுடன் உள்ளார். இதை தவிர என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஷோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. ஒருவேளை அவள் தவறாக விளையாடினால் கூட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பல முறை உங்களை நிச்சயம் அவள் மகிழ்விப்பாள் என குறிப்பிட்டுள்ளார்.

டிரோல் பண்ண வேண்டாம்

டிரோல் பண்ண வேண்டாம்

பிரியங்காவை யாரும் டிரோல் செய்ய வேண்டாம் எனவும் ரோஹித் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் அபிஷேக் மற்றும் தன்னை காப்பாற்ற நிரூப் அந்த நாணயத்தை பயன்படுத்ததற்கு அவரிடம் பிரியங்கா சண்டை போடுவதாக ப்ரோமோ ஒன்று வெளியானது. இதை பார்த்து விட்டு பிரியங்காவின் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X