புருஷன் இறுதி ஊர்வலத்தில் டான்ஸ் ஆடலாமா? யாருக்கும் அருகதை இல்லை.. விளாசிய நடிகர்!

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரின் மருமகன் கார்த்திக் இறுதி சடங்குகளை செய்தார்.

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்தியது காண்பவரை கண்கலங்க வைத்தது. ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறனர்.

Robo Sankar Priyanka dance S Ve Shekar

யாருக்கும் அருகதை இல்லை: அதுகுறித்து நடிகர் எஸ்வீ சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவியின் நடனம் ஆடியது தற்போது பேசு பொருளாகி, பலரும் அவரை தவறாக பேசி வருகிறார்கள். இது எல்லாம் கலாச்சாரமா என பதிவிட்டு வருகிறார்கள். நெருங்கிய ஒருவரின் இறப்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சில பேர் சத்தம் போட்டு அழுவார்கள், சிலர் வாயை மூடிக்கொண்டு அழுவார்கள். அதற்காக அவர்களுக்கு சோகம் இல்லை என்று ஆகிவிடாது. ஆனால், கணவரின் இறுதி பயணத்தில், நடனமாடி துக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அதை விமர்சிப்பதற்கு யாருக்கும் அருகதையே கிடையாது.

தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்: அவர்கள் உங்கள் வீட்டில் வந்து டான்ஸ் ஆடவில்லை. என்பதை அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சோசியல் மீடியா இருக்கு என்பதற்காக தயவு செய்து யாரையும் புண்படுத்த வேண்டாம். எத்தனை ஆண்டு காலமானாலும், ரோபோ சங்கரின் மறைவை யாருமே ஈடு செய்ய முடியாது. தயவுசெய்து அடுத்தவருடைய சோகத்தையோ துக்கத்தையோ விமர்சனம் செய்யாதீர்கள். ஏனென்றால் சோகத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய மனோபாவம். அது அவர்களின் குடும்ப விஷயம், இதை விமர்சனம் செய்யாதீர்கள், இது என் வேண்டுகோள் என எஸ்வீ சேகர் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X