»   »  பிரியங்கா பாட, சோனாக்ஷி ஆட: சல்மான் பர்த்டே பார்ட்டியில் அடடா

பிரியங்கா பாட, சோனாக்ஷி ஆட: சல்மான் பர்த்டே பார்ட்டியில் அடடா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சல்மான் கானின் 49வது பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா பாடினார், சோனாக்ஷி சின்ஹா டான்ஸ் ஆடினார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 49வது பிறந்தநாளை கடந்த 27ம் தேதி கொண்டாடினார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிறந்தநாள் பார்ட்டி மும்பை பான்வெல்லில் உள்ள அர்பிதா பார்ம்ஹவுஸில் நடைபெற்றது.

இந்த பார்ட்டிக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர்.

ஸ்ட்ராபெர்ரி கேக்

ஸ்ட்ராபெர்ரி கேக்

நள்ளிரவு 12 மணிக்கு சல்மான் கான் ஸ்ட்ராபெர்ரிகளால் அலங்கரிக்கப்பட்ட கேக்கை வெட்டினார். அப்போது அவரின் தந்தை சலீம் கான் விண்ணை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார்.

சல்மான்

சல்மான்

பிறந்தநாள் பார்ட்டியில் சல்மான் தனது தாய் சல்மா மற்றும் அண்மையில் திருமணமான தங்கை அர்பிதாவுடன் நேரத்தை செலவிட்டார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பார்ட்டியில் பாலிவுட் குயில் பிரியங்கா சோப்ரா பாட்டு பாடி அசத்தினார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

பார்ட்டியில் சோனாக்ஷி சின்ஹா டான்ஸ் ஆடியதுடன் சல்மானையும் ஆடுமாறு அழைத்தார். ஆனால் சல்மானுக்கு டான்ஸ் ஆடும் மூடு இல்லாததால் அவர் ஆடவில்லை.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

காலை 5 மணி வரை நடந்த பார்ட்டிக்கு அதிகாலை 4.30 மணிக்கு நடிகர் அஜய் தேவ்கன் வந்தார். அவரும் சல்மானும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

சினேஹா

சினேஹா

பார்க்க ஐஸ்வர்யா ராய் போன்று இருக்கும் சினேஹா உல்லலை சல்மான் கான் தான் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் சல்மானின் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

ஷாருக்கானுக்கு நெருக்கமான இயக்குனரான கரண் ஜோஹார் சல்மான் கானின் பர்த்டே பார்ட்டிக்கு வந்திருந்தார்.

English summary
Priyanka Chopra sang a song and Sonakshi Sinha danced at Salman Khan's birthday bash in Mumbai.
Please Wait while comments are loading...