இவனுங்களுக்கு எல்லாம் ஏன்டா எலிமினேஷன் ஆக மாட்டேங்குது...கதறும் பிரியங்கா

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 65 வது நாளான இன்று அமீர், பாவ்னி இடையேயான உறவு பற்றியே அதிகம் காட்டப்பட்டுள்ளது. இதுவரை பாவ்னி, அபினய் இடையேயான உறவு பற்றியே வீட்டில் உள்ள பலரும் பேசி வந்தனர். ஆனால் பாட்டில் டாஸ்க்கின் போது, பாவ்னியை லவ் பண்ணுறியா என அபினய்யிடம் நேரடியாகவே கேட்டார்.

ராஜுவின் இந்த கேள்விக்கு மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்ல, இதை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு தனது கேட்டது தவறு என்பதை உணர்ந்து அனைவர் முன்னிலையிலும் பாவ்னி மற்றும் அபினய்யிடம் மன்னிப்பு கேட்டார் ராஜு. இருந்தாலும் ராஜு கேட்டது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறி பலரிடமும் சொல்லி அழுதார் பாவ்னி.

ஆனால் ராஜு இப்படி கேட்டு விட்டாரே என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், அமீர்- பாவ்னி நெருக்கமாக பேசி, பழக துவங்கினர். இதை பார்த்து அபினய் காண்டாவதும் காட்டப்பட்டது. இதனால் ராஜு கேட்டது உண்மை தானோ என அனைவரின் மனதிலும் தோன்ற துவங்கியது.

ஓப்பனாக பேசும் அமீர் – ராஜு

ஓப்பனாக பேசும் அமீர் – ராஜு

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தனக்கும் பாவ்னிக்கு இடையேயான பழக்கம், அதனால் அபினய் கடுப்பாவது பற்றி ராஜுவிடம் ஓப்பனாக பேசினார் அமீர். ராஜுவும், நீ எப்படி பழகுகிறாய். நான் அதை எப்படி எடுத்துக் கொள்ளட்டும் என வெளிப்படையாக கேட்டார். அதற்கு அமீரும் ஜாலியாக பழகுவதாகவும், அவளை கலாட்டா செய்து கொண்டிருப்பது தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார்.

பாவ்னியின் ரசிகன் நான்

பாவ்னியின் ரசிகன் நான்

இந்நிலையில் அமீர், ராஜு உள்ளிட்ட மற்றவர்களுக்கு நடனம் கற்றுத் தருகிறார். அனைவரும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கையில் பாவ்னியும், பிரியங்காவும் தாமரை மற்றும் ராஜு நடிப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். தாமரை தன்னிடம் பேசுவதில்லை என பேசிக் கொண்கிறார்கள். அப்போது அங்கு வரும் அமீர், தான் பாவ்னியின் மிகப் பெரிய ரசிகன் என கூறுகிறார்.

பூடகமாக பேசும் அமீர்

பூடகமாக பேசும் அமீர்

அதற்கு பிரியங்கா, நிஜமாவே ஃபேன் தானா என அழுத்தி கேட்கிறார். அதற்கு அமீர், ஃபேன் என்று மட்டும் தான் சொல்ல முடியும். எல்லாவற்றையும் ஓப்பனாக சொல்ல முடியாது. நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். வந்த நாள் முதல், என்ன பொண்ணு என்று தான் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். தனக்கு பாவ்னி மீது க்ரஷ் என்றும் சொல்கிறார்.

 இவங்களுக்கு எலிமினேஷன் இல்லையா

இவங்களுக்கு எலிமினேஷன் இல்லையா

இதை கேட்டு பிரியங்கா, இதை எல்லாம் கேட்கனும்னு எனக்கு தலையெழுத்து. எவன் எவனை எல்லாம் எலிமினேட் செய்கிறார்கள். இவனுங்களுக்கு எல்லாம் ஏன்டா எலிமினேட் ஆக மாட்டேங்குது. செல்ஃப் நாமினேட் செய்து கொள்ள ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க. நான் போய் விடுகிறேன் என தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார். இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் அமீரும், பாவ்னியும்.

வெட்கப்படும் பாவ்னி

வெட்கப்படும் பாவ்னி

பிக்பாஸிற்கு வருவதற்கு முன் இன்ஸ்டாகிராம் ஐடி.,யை கண்டுபிடித்து பாவ்னிக்கு மெசேஜ் போட்டு விட்டு தான் வந்திருப்பதாக சொல்கிறார் அமீர். அக்ஷராவிடம் நீங்க தோற்று விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நேற்று நான் நாற்காலியை விட்டு தரவில்லை என விளக்கம் அளிக்கிறார் அமீர். இதைக் கேட்டு வெட்கப்பட்டு சிரிக்கிறார் பாவ்னி. அமீரும், பிரியங்காவை கூப்பிட்டு, அக்கா அங்க பாருக்கா புது விதமா சிரிக்கிறா. பாருக்கா அந்த சிரிப்ப பாருக்கா என்கிறார்.

என் நிலைமை இப்படி ஆகிடுச்சே

என் நிலைமை இப்படி ஆகிடுச்சே

இதைக் கேட்டு கடுப்பாகும் பிரியங்கா நக்கலாக, முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளர்னு சொன்னாங்க. அப்புறம் பிக்பாஸ் போட்டியாளர்னு சொன்னாங்க. அப்புறம் ஃபிரண்ட்னு சொன்னானுங்க. அப்புறம் அக்கான்னு சொல்லிட்டு ஒருத்தன் வந்தான். இப்போ கடைசில என் நிலைமை இப்படி ஆகி விட்டதே என கோடு வேர்டில் பேசி புலம்புகிறார் பிரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X