»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா மீது மோசடி வழக்குப் போடப்பட்டுள்ளது.

தனக்குத் தர வேண்டிய கமிஷன் தொகையைத் தராமல் நடிகை பிரியங்கா சோப்ரா ஏமாற்றிவிட்டதாக தமிழக திரைப்படத்தயாரிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,

பிரியங்கா சோப்ரா 2001ம் ஆண்டு நடந்த மிஸ் வோர்ல்ட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதையடுத்து எனதுநிறுவனத்தைத் தொடர்பு கொண்ட பிரியங்காவின் தந்தை டாக்டர் சோப்ரா, தன் மகளுக்கு நிறைய கதாநாயகி வேடங்கள் கிடைக்கதேவையான யுக்திகளை வழங்கும்படி கேட்டார்.

இதற்கு நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால், இதற்காக ரூ. 3 லட்சம் அட்வான்ஸ் கேட்டேன்.

ஆனால், புதிய படங்களுக்கு கையெழுத்துப் போட்டதும் பணத்தைத் தருவதாக சோப்ரா கூறினார்.

இதையடுத்து 2001ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி எனது நிறுவனத்துடன் 3 வருட காண்ட்ராக்ட் செய்து கொண்டார் பிரியங்கா.இதையடுத்து நான் பல வழிகளில் பிரியங்காவுக்கு சான்ஸ் பிடித்துத் தந்தேன்.

எனது நிறுவனத்தில் பணியாற்றிய பிரகாஷ் ஜாஜு என்பவரை பிரியங்காவின் பிஸினஸை மேம்படுத்துவதற்காக நியமித்தோம்.இதன் மூலம் பிரியங்காவுக்கு பல பட வாய்ப்புக்கள் வந்தன.

ஒப்பந்தத்தின்படி, வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதத்தை எனக்கு பிரியங்கா கமிஷனாகத் தந்திருக்க வேண்டும். ஆனால்,பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட பிரியங்கா கமிஷனைத் தரவில்லை.

முதலில் கமிஷன் தந்தவர், பின்னர் அதை நிறுத்திவிட்டார். இப்படி நிறுத்தப்பட்ட கமிஷன் தொகை ரூ. 60 லட்சமாகும். வட்டியும்சேர்த்தால் இது ரூ. 1 கோடியைத் தாண்டிவிடும்.

இதற்கிடையே நாங்கள் பிரியங்காவுக்காக நியமித்த ஊழியரான பிரகாஷை, பிரியா செயலாளராகிவிட்டார். எனதுநிறுவனத்துக்குப் பணம் தராமல் ஏமாற்றவே இதைச் செய்துள்ளார் பிரியங்கா. அவரது மோசடி தெளிவாகத் தெரிகிறது.

எனது குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் என்னால் முடியும். முதலில் கமிஷன் கேட்டு வக்கீல் நோட்டீஸ்அனுப்பினேன். பிரியங்காவிடம் இருந்து பதிலில்லை. இதனால் தான் கோர்ட் படியேறியுள்ளேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

இந்த மோசடி குறித்து பிரியங்காவின் தந்தை சோப்ரா கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவோம். போலிகையெழுத்து மூலம் ஆவணம் தயாரித்து எங்களை ஸ்ரீகாந்த் ஏமாற்ற முயல்கிறார் என்றார்.

இந் நிலையில் தனக்கும் கமிஷன் தராமல் பிரியங்கா ஏமாற்றிவிட்டதாக பிரகாஷ் ஜாஜுவும் புகார் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil