»   »  பிஆர்ஓ யூனியன் புதிய செயலாளர் தேர்வு!

பிஆர்ஓ யூனியன் புதிய செயலாளர் தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைத் துறையின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பிஆர்ஓ யூனியனுக்கு புதிய பொதுச் செயலாளராக பெரு துளசி பழனிவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பி.ஆர்.ஓ. யூனியனில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

PRO Union new secretary elected

இந்நிலையில், பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனால், பி.ஆர்.ஓ. யூனியன் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பெருதுளசி பழனிவேலும், ராமானுஜமும் போட்டியிட்டார்கள். மொத்தம் 54 வாக்குகள் பதிவாகின (மொத்தம் 67). இவற்றில் ஒன்று செல்லாத வாக்கு. பெரு துளசி பழனிவேல் 40 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். ராமானுஜத்துக்கு 13 வாக்குகள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து பெருதுளசி பழனிவேல் வெற்றி பெற்று, பி.ஆர்.ஓ யூனியன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெருதுளசி பழனிவேல் இதற்கு முன் 14 முறை பொதுச் செயலாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது 15வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Peru Thulasi Palanivel has won in Tamil Thiraipada Pathirikai Thodarbalar Union election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil