»   »  அண்ணன் தம்பிக்கு பெரிய சிக்கல்... ரேக்ளா ரேஸால் 'கடைக்குட்டி சிங்கம்' படம் ரிலீஸுக்கு பிரச்னை!

அண்ணன் தம்பிக்கு பெரிய சிக்கல்... ரேக்ளா ரேஸால் 'கடைக்குட்டி சிங்கம்' படம் ரிலீஸுக்கு பிரச்னை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கார்த்தியின் படப்பிடிப்பை மகன் தேவுடன் பார்த்து ரசித்த சூர்யா

சென்னை : கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் பாண்டிராஜ்.

'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் நடைபெற்றது. இந்தப் படத்தில் ரேக்ளா ரேஸ் காட்சியும் இடம்பெறுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது அனுமதியை மீறி ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டதால் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கிய 'கதகளி', 'இது நம்ம ஆளு', 'பசங்க' 2 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

சாயிஷா சைகல்

சாயிஷா சைகல்

இந்தப் படத்தில் கார்த்தியுடன் சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மௌனிகா, ஸ்ரீமன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சூர்யாவின் '2D என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

கார்த்தியை வைத்து சூர்யா தயாரிக்கும் முதல் படம் இது. இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். கார்த்தி நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைப்பது இதுவே முதல் முறை. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது.

ரேக்ளா ரேஸ்

இந்நிலையில், 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி காட்சி இடம்பெறுகிறது. இந்த ரேக்ளா ரேஸ் காட்சி ஷூட்டிங்கை சூர்யா தனது மகன் தேவ் உடன் பார்த்து ரசித்தார். அவர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ செம வைரலானது.

தமிழர்களீன் வீர விளையாட்டு

தமிழர்களீன் வீர விளையாட்டு

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ரேக்ளா ரேஸ். இந்த விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டப் படங்களில் அதிகமாக இடம் பெற்றிருந்தது. அதன்பின் விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' உட்பட சில படங்களில் இடம்பெற்றிருந்தது. இப்போது கார்த்தி நடிக்கும் படத்தில் வரவிருக்கிறது.

படத்துக்கு சிக்கல்

படத்துக்கு சிக்கல்

தற்போது, இந்த ரேக்ளா பந்தயத்தால் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு சிக்கல் வந்திருக்கிறது. படப்பிடிப்பின் போது அனுமதியை மீறி ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டதால் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

அனுமதி கேட்ட படக்குழு

அனுமதி கேட்ட படக்குழு

சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விலங்குகள் நல வாரியத்தில் விண்ணப்பித்த மனுவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 211, 42 சேவல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஷூட்டிங் நடத்தவுள்ளதாக அனுமதி கேட்டது 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு.

படம் ரிலீஸில் சிக்கல்

படம் ரிலீஸில் சிக்கல்

ரேக்ளா ரேஸ் ஷூட்டிங் நடத்த விலங்குகள் நல வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி மறுப்பை மீறி தென்காசியில் ரேக்ளா ரேஸ் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. சட்ட விதிகளின் படி ரேக்ளா ரேஸ் காட்சி நீக்கப்பட்டால் தான் படத்தை வெளியிட அனுமதி கிடைக்கும்.

நல்ல சகுணம்

நல்ல சகுணம்

இதனால், "ப்ரொமோஷனை இப்பவே ஆரம்பிச்சாச்சு.. இனி படம் ஹிட்டுதான்" என ரசிகர்கள் கமென்ட் அடிக்கிறார்கள். "நல்ல சகுனம்... வசூல் அள்ளப்போகுது" எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

English summary
Director Pandiraj is directing the movie 'Kadaikutty Singam', which will be lead by Karthi. In 'Kadaikkutty singam' shooting Rekla race scenes are shooted in tenkasi. The Animal Welfare Board did not permit for shoot rekla race. According to the rules, the film will be allowed to release, only rekla race scena is removed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil