For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ”உ’ எனக்குதான்!” – ”இல்லையில்லை எனக்குதான்!”: கோலிவுட்டின் லேட்டஸ்ட் டைட்டில் கலாட்டா!

  |

  சென்னை: "உ' படத்தலைப்பு தன்னுடையது என உரிமைகோரி கோலிவுட்டின் இரண்டு படத்தயாரிப்பு நிறுவனங்கள் கலத்தில் குதித்துள்ளன.

  ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஷிக் இயக்கத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜீத் உள்பட பல புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் "உ". இந்தப் படம் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறதாம்.

  ஆனால், திடீரென்று நேற்று காலை பத்திரிகை நண்பர்களுக்கு உ என்ற தலைப்பிடப்பட்டு வேறு ஒரு படத்தின் செய்தி வந்தது. இதனையடுத்து, இரு தரப்பும் தங்கள் மோதலை ஆரம்பித்துள்ளன.

  எஸ்.எஸ். வாசனின் ’உ’....

  எஸ்.எஸ். வாசனின் ’உ’....

  F1 Studio சார்பில் எஸ்.எஸ். வாசன் முதன் முறையாக 'உ' என்ற தமிழ் படத்தைத் தயாரிக்கிறார்.இது அதி வேக நாகரீக வளர்ச்சியில் கண்மூடித்தனமாக வாழும் மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷ்யங்களை சஸ்பென்ஸ் கலந்து சொல்ற படம்தான் இந்த'உ' என்ற ரீதியில் விலாவாரியான தகவல்கள் சொல்லப்படுகின்றன..

  இன்னொரு ‘உ’....

  இன்னொரு ‘உ’....

  இப்படி செய்தி வந்ததைக் கேள்விப்பட்ட இன்னொரு உ படத்தின் இயக்குநர் ஆஷிக் தன் பி.ஆர். ஓ மூலம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,"நாங்கள் "உ" தலைப்பை 2012ம் ஆண்டு, ஜூன் மாதம் 30ம் தேதி (30.06.2012).தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்தோம்.

  எங்களுக்கே முன்னுரிமை...

  எங்களுக்கே முன்னுரிமை...

  அதன்படி, ஜூலை மாதம் 31ம்தேதி (31.07.2012) "உ" டைட்டிலை இதுவரை வேறு யாரும் பதிவு செய்யவில்லை என்பதை உறுதி செய்த பின் எங்களுக்கு வழங்கினார்கள். "உ" தலைப்பை 29.06.2013 வரை பயன்படுத்திக்கொள்ளும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது.

  அப்படியே... ஷாக் ஆகிட்டோம்....

  அப்படியே... ஷாக் ஆகிட்டோம்....

  இன்னொரு ‘உ' படத்தின் செய்தி எங்கள் 'உ' படத்தின் தலைப்பில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது சம்பந்தமான எல்லா ஆதாரங்களும் இந்த தகவலுடன் இணைத்துள்ளோம். முறையாக பதிவு செய்து நாங்கள் வைத்திருக்கும் தலைப்பை இன்னொரு நிறுவனம் பயன்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை. அது ஏற்கத்தக்கதும் இல்லை.

  கூகுள்ல கூட தேடிப்பாருங்க...

  கூகுள்ல கூட தேடிப்பாருங்க...

  கூகுள் இணைய தளத்தில் Vu Tamil Film அல்லது vu tamil movie என்று தேடினால் எங்கள் உ படத்தை பற்றிய செய்திகள், புகைப்படங்கள், போஸ்டர் டிசைன்கள் உடனடியாக வரும்.

  திட்டமிட்ட சதி...

  திட்டமிட்ட சதி...

  இவ்வளவும் நடந்த பின் வேண்டுமென்றே உ படத் தலைப்பை அபகரிக்க திட்டமிட்டு, இப்படி ஒரு செயலில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வளவும் நடந்திருப்பது அவர்களுக்கு தெரியாதா.... ஒரு வேளை இந்த தலைப்பை அவர்கள் முறையாக பதிவு செய்திருந்தால் எங்களிடம் ஒரு வார்த்தை கூட இது வரை கேட்காமல் இருந்தது ஏன்?

  பப்ளிகுட்டிக்காகவா... இப்படி.

  பப்ளிகுட்டிக்காகவா... இப்படி.

  இவ்வளவு நாளும் அமைதியாக இருந்து விட்டு, பப்ளிசிட்டிக்கு ஆசைப்பட்டு திடீரென இப்படி கிளம்பி இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல. அதோடு தவறான முன்னுதாரணமும் ஆகும். இல்லை தெரியாது என்றால் இனிமேல் அவர்கள் எங்கள் தலைப்பை இப்படி முறைகேடாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

  புகார் தருவோம்...

  புகார் தருவோம்...

  நாங்கள் இது சம்பந்தமாக தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் முறையாக கம்ப்ளெய்ண்ட் செய்துள்ளோம்.

  'vu' ஆ... இல்ல, 'woo' ஆ?

  'vu' ஆ... இல்ல, 'woo' ஆ?

  நாங்கள் தமிழில் உ என்றும் ஆங்கிலத்தில் அதையே VU என்றும் பதிவு செய்துள்ளோம். ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் WOO (ஊ) என்று பதிவு செய்து விட்டு அதை தமிழில் உ என்று மாற்றி சொல்கிறார்கள். இது மோசடி ஆகும்.

  ரசிகர்களை குழப்பாதீங்க... ப்ளீஸ்

  ரசிகர்களை குழப்பாதீங்க... ப்ளீஸ்

  ரசிகர்கள் குழம்பினால் அது படத்தின் வெற்றியை பாதிக்கக் கூடும் , எனவே பத்திரிக்கை நண்பர்கள், முறையாக பதிவு செய்து யாரையும் ஏமாற்றாமல் உழைத்துக்கொண்டிருக்கும் எங்களின் சார்பில் இந்த செய்தியை வெளியிடும்படி வேண்டுகிறோம்" என்று உ படத்தின் இயக்குநர் ஆஷிக் கூறியிருக்கிறார்.

  ஊ......... வடக்குப்பட்டி ராமசாமிய பாக்குறதுக்கு முன்னாடி... காலைல நரி முகத்துல முழிங்க... எல்லாம் சரி ஆகிடும் பாஸ்...

  Read more about: vu tamil cinema
  English summary
  The movie Voo is in shooting progress. Director Ashik claims that they have already registered the title Voo in tamil.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X