»   »  'நாகினி'யால் சூப்பர் ஸ்டார் வீட்டில் பிரச்சனை

'நாகினி'யால் சூப்பர் ஸ்டார் வீட்டில் பிரச்சனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாகினி டிவி சீரியல் புகழ் மவுனி ராயால் சல்மான் கான் வீட்டில் பிரச்சனையாம்.

நாகினி டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். டப்பிங் சீரியலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட சீரியல் நாகினி. மவுனி ராய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டார் மவுனி ராய்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் அக்ஷய் குமார் ஜோடியாக கோல்டு படத்தில் நடிக்கிறார் மவுனி ராய். இந்த படம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

சல்மான்

சல்மான்

சல்மான் கானின் செல்ல தங்கச்சி அர்பிதா கானின் கணவர் ஆயுஷ் சர்மாவுக்கு பாலிவுட்டில் ஹீரோவாகும் ஆசை வந்துள்ளது. அவரை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் சல்மான் கான்.

மவுனி ராய்

மவுனி ராய்

தனது மச்சினனுக்கு மவுனி ராயை ஜோடியாக நடிக்க வைக்க விரும்புகிறார் சல்மான் கான். ஆனால் மவுனி ராய் வேண்டாம் என்று ஆயுஷ் சல்மானிடம் கூறியும் அவர் கேட்கவில்லை.

ஆயுஷ்

ஆயுஷ்

பிரபல பாலிவுட் நடிகை அல்லது பிரபல நடிகையின் மகள் அல்லது சகோதரி அல்லது வேறு யாராவது புதுமுக நடிகையுடன் நடிக்க ஆசைப்படுகிறார் ஆயுஷ்.

அடம்

அடம்

சல்மான் கானின் பாசமும், கோபமும், பிடிவாதமும் அனைவருக்கும் தெரிந்தது தான். இதனால் செய்வதறியாது கையை பிசைகிறார் ஆயுஷ். மவுனி ராயால் சல்மான், ஆயுஷ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Everything is not well between Salman Khan and his brother-in-law Aayush Sharma, who is desperate to make a career in Bollywood. And the reason behind this is a Bollywood newbie, whom Salman Khan wants to cast opposite Aayush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil