மன்மத லீலை பாத்துட்டு கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்களான்னு தெரியல - அசோக் செல்வன்!
சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு வெற்றியைத் தொடர்ந்து ஆக்ஷன் படம் எடுப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இப்போது மன்மதலீலை என்ற படத்தை இயக்கியுள்ளார்
Recommended Video
அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க முழுக்க முழுக்க அடல்ட் காமெடியுடன் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அசோக்செல்வன் மன்மதலீலை படம் பார்த்துட்டு கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்களான்னு தெரியல என கலகலப்பாக பேசியுள்ளார்

டைம் லூப் பாணியில்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை அதுவும் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கின்ற வகையில் புது புது கதைகளில் கலக்கிகொண்டு இருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு கடைசியாக இயக்கிய திரைப்படம் மாநாடு. தமிழ் சினிமாவில் பெரிதாக பலரும் முயற்சிக்காத டைம் லூப் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் சிம்பு மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து கலக்கி இருப்பார்

மன்மதலீலை
எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், கருணாகரன்,பிரேம்ஜி என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பபார்கள் மாநாடு திரைப்படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. வெற்றியின் களிப்பில் இருந்த வெங்கட்பிரபு மாநாடு படத்தை தெலுங்கில் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தமிழில் அடுத்ததாக ஒரு மாஸ் ஹீரோவை வைத்து மாஸ் படத்தை இயக்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அசோக் செல்வனை வைத்து மன்மதலீலை என்ற வித்தியாசமான படத்தை இயக்கியுள்ளார்

அடல்ட் காமெடி
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டுள்ள அசோக்செல்வன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி கண்டு வருகிறது. கடைசியாக வெளியான ஓ மை கடவுளே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் முதல் திரைப்படமே மன்மத லீலை என்ற டைட்டிலுடன் முழுக்க முழுக்க அடல்ட் காமெடி மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் விரும்பும் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்களான்னு தெரியல
வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியாக உள்ள மன்மதலீலை ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மன்மதலீலை படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அசோக் செல்வன் இந்த படத்திற்கு பிறகு எனக்கு கல்யாணம் பண்ணிக்க பொண்ணு குடுப்பாங்களா இல்லையானு தெரியல என கலகலப்பாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











