»   »  கௌதம் மேனனால் தான் படம் ரிலீஸ் ஆகவில்லை.. தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

கௌதம் மேனனால் தான் படம் ரிலீஸ் ஆகவில்லை.. தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இயக்குநர் கௌதம் மேனன் தற்போது தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். தனது ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படங்களையும், குறும்படங்களையும் தயாரித்து வருகிறார் கௌதம் மேனன்.

'நரகாசூரன்' படத்தை இயக்கியிருக்கும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், கௌதம் மேனன் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஒருவரும் கௌதம் மேனன் மீது குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பாக்கியுள்ளது.

 Producer accused Gautham menon

தயாரித்து சில மாதங்கள் தாமதம் ஆனாலே அந்தப் படம் மீது பழைய படம் என்ற ஒரு இமேஜ் வந்துவிடும். ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம். கௌதம் மேனனின் படங்கள் வருடக்கணக்காக வெளிவராமல் இருக்கின்றன.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம், கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட், குளோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்க, செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் பலர் நடிக்க உருவான படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. படம் ஃபைனான்ஸ் பிரச்னையால் வெளியிட முடியாத நிலை உருவானது. 2 கோடி ரூபாய் வரை நிதிச்சுமையில் இந்தப் படம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் வெளிவராமல் இருப்பதற்கு கௌதம் மேனன் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குளோ ஸ்டூடியோஸ் நிறுவனம், கௌதம் மேனனே படத்தின் சிக்கலுக்குக் காரணம் என சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Producer accused Gautham menon to the delay of 'Nenjam marappadhillai' release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X