twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'படம் ஹிட், சம்பளத்தை வாங்கிக் கொடுங்க..' பிரபல தயாரிப்பாளர் மீது இயக்குனர் பரபரப்பு புகார்!

    By
    |

    ஐதராபாத்: படம் ஹிட்டாகியும் தனது சம்பளத்தை தரவில்லை என்று தயாரிப்பாளர் மீது இயக்குனர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்துள்ள படம், க்ராக். இதில் ரவிதேஜா ஹீரோவாக நடித்துள்ளார்.

    அடேங்கப்பா.. நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அட்டகாச அதிர்ஷ்டம்.. இவ்ளோ கோடியாமே? அடேங்கப்பா.. நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அட்டகாச அதிர்ஷ்டம்.. இவ்ளோ கோடியாமே?

    வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, ரவிசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை கோபிசந்த் மலினேனி இயக்கி உள்ளார்.

    மே மாதம் ரிலீஸ்

    மே மாதம் ரிலீஸ்

    இவர் இதற்கு முன் ரவிதேஜா நடிப்பில் டான் சீனு, பலுப்பு ஆகிய படங்களை இயக்கியவர். தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக தள்ளிப் போனது.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    இந்நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படம் என்பதால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி அன்று காலை படம் ரிலீஸ் ஆகவில்லை.

    பைனான்ஸ் சிக்கல்

    பைனான்ஸ் சிக்கல்

    விஷால், ராஷி கண்ணா நடித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம், அயோக்யா. இது தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக். இதை தயாரித்தவர் தாகூர் மது. இந்த படம் கடைசி நேரத்தில் பைனான்ஸ் சிக்கலில் நின்றது. இதற்காக ஸ்கிரீன் சீன் நிறுவனத்திடம் ரூ.5 கோடி கடன் பெற்று படத்தை ரிலீஸ் செய்தார், மது.

    நீதிமன்றம் தடை

    நீதிமன்றம் தடை

    அந்தப் பணத்தை அவர் திருப்பித் தராததால், ஸ்கிரீன் சீன் நிறுவனம் 'க்ராக்' படத்துக்குத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றது. தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, படம் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் பிரச்னை பேசி முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆனது. படம் வரவேற்பை பெற்றது.

    சம்பளம் தரவில்லை

    சம்பளம் தரவில்லை

    இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குனர் கோபிசந்த் மலினேனி, தனக்கு தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை என்றும் அதை வாங்கி தருமாறும் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குனர் சங்கம் இந்த புகாரை, தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. தயாரிப்பாளர் மதுவின் முந்தைய படங்களுக்கும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    'Krack' director Gopichand Malineni has complained against Producer Madhu of not clearing his remuneration. The director has lodged a written complaint to Director’s Association.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X