»   »  திருட்டு சிடி பிரச்சினையில்... தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது - விஷால்

திருட்டு சிடி பிரச்சினையில்... தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருட்டு சிடி பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சூர்யாவின் 24, கோ 2, பென்சில் படங்களின் திருட்டு சிடி வெளியாகி வசூல் ரீதியாக அப்படங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Producer Association no Action on the issue of pirated CD says Vishal

திருட்டு சிடி பிரச்சினை தொடர்பாக நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எல்ரெட் குமார் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

24

சமீபத்தில் வெளியான 24 படத்திற்கு திருட்டு சிடி பெங்களூரில் உள்ள பிவிஆர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னையில் உள்ள பிவிஆர் தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுவதை தடுத்து நிறுத்தினார். தயாரிப்பாளர் சங்கத்தில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் சந்திப்பு

திருட்டு சிடி பிரச்சினை தொடர்பாக நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எல்ரெட் குமார் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் விஷால் '' பெங்களூரில் உள்ள பிவிஆர் தியேட்டரில் திருட்டு சிடி தயாரித்ததை ஆதாரத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்படைத்திருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கம்

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஒரு நடிகரால் தயாரிப்பாளர் நஷ்மடைந்து விட்டால் அவருக்கு நஷ்ட ஈட்டை பெற்றுகொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முன்வருகிறது. ஆனால் திருட்டு சிடி விவகாரத்தில் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சாக்கு போக்கு சொல்லி வருகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை'' என்று கூறினார்.

தெறி, இஞ்சி இடுப்பழகி

தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ''பெங்களூர் பிவிஆர் தியேட்டரில் ‘24', ‘தெறி', ‘இஞ்சி இடுப்பழகி உட்பட 7 திருட்டு சிடிக்கள் தயாராகியுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டில் 800 கோடியில் இருந்து 1000 கோடி வரை(80%) திருட்டு சிடிக்கு லாபம் கிடைத்துள்ளது. அதே நேரம் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு 20% லாபம் கூட கிடைக்கவில்லை.

சாகும்வரை

'தயாரிப்பாளர் சங்கம் இந்த அலட்சியப் போக்கைத் தொடர்ந்தால் சாகும்வரை தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம் இருப்பதுதான் ஒரேவழி' என்று ஞானவேல்ராஜா வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

English summary
Actor Vishal Says in Recent Interview ''Producer Association shows negligence on the issue of pirated CD''.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil