»   »  சிவாஜி, கமல் படங்களை தயாரித்த சித்ரா ராமு மரணம்

சிவாஜி, கமல் படங்களை தயாரித்த சித்ரா ராமு மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா ராமு மரணம் அடைந்தார்.

பிரபல இயக்குனர், நடிகர் சித்ரா லக்ஷ்மணனின் அண்ணன் பிரபல தயாரிப்பாளரான சித்ரா ராமு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த ஜல்லிக்கட்டு, உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த சூரசம்ஹாரம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் சித்ரா ராமு.

Producer Chitra Ramu no more

அவர் குடும்பத்தாருடன் சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

அவருக்கு தங்கம் என்ற மனைவி, சரவணன், விஜய் கார்த்திக் ஆகிய மகன்கள் மற்றும் குகப்பிரியா என்ற மகள் உள்ளனர். அவரின் மறைவுச் செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நடிகர் மனோபாலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அய்யோ.. என்ன இது.. சித்ரா ராமு.. காலமாகிவிட்டார்.. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
Popular cinema producer Chitra Ramu passed away at the age of 73 in Chennai on saturday evening.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil