»   »  ஸ்ட்ரைக்குக்கு முடிவு.. சிக்கல் கொடுத்த தியேட்டர்களை கட்டம் கட்ட விஷால் திட்டம்!

ஸ்ட்ரைக்குக்கு முடிவு.. சிக்கல் கொடுத்த தியேட்டர்களை கட்டம் கட்ட விஷால் திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை!

சென்னை : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் திரையுலக ஸ்ட்ரைக் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த ஸ்ட்ரைக் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.

க்யூப் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகம் முழுக்க பெரும்பான்மையான திரையரங்குகளுக்கு டிஜிட்டல் சேவை செய்யும் இந்த நிறுவனம் சில தியேட்டர் உரிமையாளர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Producer council corners some theaters

இதன்மூலம், தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்த ஸ்ட்ரைக்கிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் குடைச்சல் கொடுத்து வந்தார்களாம். இந்நிலையில், அதிரடியாக, வேறொரு சிறிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

ஏரோக்ஸ் எனும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனம் 50% குறைந்த கட்டணத்தில் திரையிட ஒப்புக்கொண்டுள்ளதாம். மேலும், சில நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதனால், விரைவில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்த க்யூபின் ஆதிக்கத்தை அடக்கும் முயற்சியாக உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த முயற்சியை எடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

இந்த ஸ்ட்ரைக்கின்போது, தயாரிப்பாளர் சங்கத்தினை முடிவெடுக்க விடாமல் முடக்க முயற்சித்ததாக சில தியேட்டர் உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக நின்ற சில தியேட்டர்களுக்கு புதிய படங்களை கொடுப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்தத் தியேட்டர்களை கட்டம் கட்டும் முடிவில் முனைப்பாக இருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

English summary
The strike will soon be completed by the Producers council's new initiative. During the strike, some theater owners have been accused of trying to disrupt the producers council. TFPC takes strict action on this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X