»   »  என்ன நடக்கிறது தமிழ் சினிமாவில்..? நாளை முதல் முழு ஸ்ட்ரைக்!

என்ன நடக்கிறது தமிழ் சினிமாவில்..? நாளை முதல் முழு ஸ்ட்ரைக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை தியேட்டர் ஸ்ட்ரைக் இல்லை- வீடியோ

சென்னை : கியூப், யூஎஃப்ஓ கட்டண பிரச்னைகள் தீரும் வரை புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டு இரண்டு வாரங்களாக நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் எட்டப்படாததால் திரையுலகினர் நாளை முதல் முழுமையான ஸ்ட்ரைக்கில் ஈடுபடவிருக்கிறார்கள்.

நாளை முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாதது மட்டுமல்லாமல், ஷூட்டிங், சினிமா விழாக்கள் ஆகிய எந்த நிகழ்வுகளும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலக ஸ்ட்ரைக்

திரையுலக ஸ்ட்ரைக்

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் குறைக்க வலியுறுத்தி தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது. குறைக்கப்பட்ட 18% - 23% கட்டணத்திற்கு திருப்தியான மற்ற திரையுலகங்கள் போராட்டத்திலிருந்து விலக, தமிழ் தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

மார்ச் 16 முதல்

மார்ச் 16 முதல்

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், போராட்டத்திற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பற்றி விளக்கப்பட்டது. மார்ச் 16-ம் தேதிக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படங்களின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெறாது எனவும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் ஷூட்டிங் வேலைகள் மார்ச் 23- ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

தியேட்டர் டிக்கெட்டுகளில் சிறிய படம், பெரிய படம் எனப் படத்திகேற்ற வகையில் விலையை நிர்ணயிக்க வேண்டும், டிக்கெட் முன்பதிவு நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஃபெஃப்சி ஆதரவு

ஃபெஃப்சி ஆதரவு

இதுகுறித்த அனைத்து விவாதங்களையும் ஆலோசித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மற்ற திரைத்துறை சங்கங்கள் மேற்கண்ட முடிவுகளையெல்லாம் ஒருமனதாக ஆதரித்துள்ளன.

ஃபெஃப்சி அமைப்பு தயாரிப்பாளர் சங்கங்கத்தின் இந்த முடிவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

திரையரங்க முதலாளிகளின் கோரிக்கை

திரையரங்க முதலாளிகளின் கோரிக்கை

இதற்கிடையே, தியேட்டர் பராமரிப்புக் கட்டண உயர்வு, லைசென்ஸ் புதுப்பிப்பு, உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி ரத்து என முன் வைத்திருந்த பல கோரிக்கைகளை மார்ச் 16- ம் தேதிக்குள் அரசு ஆணையாகப் பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில், திரையரங்குகள் மார்ச் 16 முதல் மூடப்படும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

தியேட்டர் முதலாளிகளின் இந்த அறிவிப்புக்கும் தயாரிப்பாளர்களின் கியூப், யூஎஃப்ஓ நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கும் தொடர்பில்லை. சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, நேற்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடப்படாது வழக்கம்போல் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

அரசு தலையிடுமா?

அரசு தலையிடுமா?

திரையுலகினர் ஒருபக்கம் போராட்டத்தில் ஈடுபட, தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதில், அரசு தலையிட்டு வரைமுறைகளைச் செய்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு கை கொடுக்குமா என்பதே சினிமா ஆர்வலர்களின் கேள்வி.

English summary
The Producers council has been decide that new Tamil films will not be released until the Cube and UFO issues are resolved. Now, they are going to be in full strike from tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X