»   »  சினிமா வெளங்கினமாதிரிதான்.... இது நியாயமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளே...?

சினிமா வெளங்கினமாதிரிதான்.... இது நியாயமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளே...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பை போல சினிமா என்பது தியேட்டர்களை மட்டுமே நம்பி இல்லை. டிவி, ஆன்லைன் ஆகியவை வந்தபின்னர் பல வழிகளில் சம்பாதிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆன்லைனில்தான் அதிகம் பேர் பார்க்கிறார்கள். இதை புரிந்த தமிழ்ராக்கர்ஸ் போன்றோர்கள் சினிமாவை ஆன்லைனில் வெளியிடத் தொடங்கினார்கள். இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டுமானால் தயாரிப்பாளர்களே ஆன்லைனில் வெளியிட வழிவகை செய்ய வேண்டும்.

Producer Council functionaries cheat members

"அட... நீங்க வேற... இதைத்தானே எல்லா மேடைகளிலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேசுறாங்க... அமேசான், நெட்ஃப்ளிக்ஸ்னு ரிலீஸ் பண்ணி காசு பார்க்க சொல்றாங்க... என்று கேட்கிறீர்களா? சொல்றாங்க ஆனா செய்யிறாங்களா?"

நீங்கள் குறிப்பிடும் அந்த ஆன்லைன்களில் எல்லாம் யார் யாருடைய படங்கள் வெளியாகி இருக்கின்றன என்று செக் பண்ணுங்க... சங்க நிர்வாகிகளின் படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கும். சின்ன படங்கள் வெளியாகி இருக்காது.

ஆமாம், மேடைகளில் மட்டும் பேசும் இவர்கள் அதற்கான சோர்ஸ்களை மற்ற தயாரிப்பாளர்களுக்கு தருவதில்லையாம். இதை நமக்கு சொன்னது சில சின்ன தயாரிப்பாளர்கள்.

இப்படியே பண்ணுங்கய்யா... சினிமா வெளங்கிடும்!

English summary
Producer council functionaries have maintaining secrwt on their sources for digital rights sale.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil