Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புயல் நிவாரண நிதியாக 25 லட்சம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ் பெயர்களை கொண்ட 'யு சான்றிதழ்' பெற்ற படங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளுடன் வரிவிலக்கு அளித்துள்ளார்.
இதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய நடைமுறையில், 5 அல்லது 6 சதவீத படங்களை தவிர, மீதி படங்கள் அத்தனையும் தோல்வி அடைகின்றன.
தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே திரைப்பட தொழிலாளர்களுடன் ஊதிய பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருக்கிறோம்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
இதற்காக பட அதிபர்கள் கேயார், ஹென்றி உள்பட 15 பேர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். பேச்சுவார்த்தை முடியும் வரை, எந்த தயாரிப்பாளரும் தற்போதைய சம்பளத்தை தவிர, கூடுதலாக சம்பளம் கொடுக்கக் கூடாது. மீறி, கூடுதல் சம்பளம் கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பேச்சுவார்த்தை முடியும் வரை, தொழிலாளர்கள் பழைய சம்பளத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
செலவைக் குறைங்க...
பட தயாரிப்பு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
100 நாட்கள், 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ரூ 25 லட்சம் நிதி உதவி
சமீபத்தில் வீசிய தானே புயலால் கடலூர் சுற்று வட்டாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்க இருக்கிறோம்", என்றார்.