»   »  கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!

கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவி ஏற்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கியிருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தேர்தல் நடைபெற்றது.

Producer Council office bearers take charge

இதில் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார் கலைப்புலி எஸ் தாணு. துணைத் தலைவர்களாக எஸ் கதிரேசனும், பி எல் தேனப்பனும் தேர்வு செய்யப்பட்டனர்.

டிஜி தியாகராஜன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

டி சிவா மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் பொதுச் செயலாளர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ராதா பார்க் இன் ஹோட்டலில் நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் அனைவரும் திரண்டு வந்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர். முன்னாள் தலைவர் கேஆர் நேரில் வந்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

English summary
The newly elected producer council office bearers took charge on Monday evening.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil