»   »  திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி - விஷால் அறிவிப்பு!

திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி - விஷால் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், புதிய திரைப்படங்கள் வெளிவராது என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில், தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள், தொழில்நுட்ப நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஆனால், பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

Producer council protest continues says vishal

தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய திரைபடங்கள் வெளிவராது, போராட்டம் தொடரும். திரைத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

திரைப்படத்தின் திரையரங்கு கட்டணத்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

வரும் புதன்கிழமை திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். பேரணியாகச் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

English summary
The protest will continue until the Producers council's demands are fulfilled. Vishal and RK Selvamani said that cinema artists rally will be held on Wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X