»   »  சரித்திர வெற்றி... ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து!

சரித்திர வெற்றி... ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு தமிழ் திரை அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

Producer Council wishes Jayalalithaa

ஃபெப்சி, இயக்குநர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் போன்றவை ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துள்ளன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மக்களுக்காக நான்!! மக்களால் நான்!' என்று சூளுரைத்து தன்னிகரில்லா அறுதி பெரும்பான்மையுடன் சரித்திர வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக அரியணை ஏறும் ஜெயலலிதாவுக்கும், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது.

English summary
Tamil Film Producer Council has conveyed their wishes to CM Jayalalithaa.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil