Don't Miss!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Sports
இந்திய அணிக்கு நற்செய்தி.. ஆஸ்திரேலியாவின் டேஞ்சர் வீரர் திடீர் விலகல்.. இனி ஈஸியா சுருட்டிவிடலாம்!
- News
கடலுக்குள் பேனா நினைவிடம் அமைப்பது எப்போது? தடைக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு!
- Lifestyle
வாய் துர்நாற்றம் & வயிற்று வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால்...உடலில் இந்த சத்து குறைவாக இருக்கலாம்!
- Automobiles
திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தென்றலாகவும்.. புயலாகவும்.. திரையுலகிற்கு கிடைத்த மணி.. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!
சென்னை : நடிகர் தனுஷின் நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் தனுஷ் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.
யாரைப்பார்த்து
இந்தக்
கேள்வியை
கேட்கிறீர்கள்?
..கோபப்பட்ட
தனுஷின்
தந்தை
கஸ்தூரிராஜா

நானே வருவேன் படம்
நடிகர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோகவும் வில்லனாகவும் நடித்துள்ளதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

29ம் தேதி ரிலீஸ்
படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தில் செல்வராகவனும் தனுஷும் இணைந்து மிரட்டியுள்ளதாக முன்னதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் கேரக்டர்
இந்தப் படத்தில் செல்வராகவனும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார். அவர் சமீப காலங்களில் நடிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். விஜய்யின் பீஸ்ட், அருண் மாதேஸ்வரனின் சாணி காயிதம் போன்ற படங்களில் அவர் தனது இயல்பான மற்றும் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வித்தியாசமான கெட்டப்
குறிப்பாக சாணி காயிதம் படத்தில் தன்னுடைய சகோதரிக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு அவருடன் இணைந்து பழிவாங்கும் கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். போகிற போக்கில் கொலை செய்யும் அவரது கேரக்டர் நல்ல விமர்சனங்களை அவருக்குப் பெற்று தந்தது. இந்நிலையில் நானே வருவேன் படத்தில் அவரது கெட்டப் வித்தியாசமான காணப்படுகிறது.

இரு தினங்களில் ரிலீஸ்
இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது. அதற்கு அடுத்த நாள் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சர்வதேச அளவில் பிரம்மாண்டமான அளவில் ரிலீசாக உள்ள நிலையில், அந்த பிரம்மாண்டமான படைப்புடன் நானே வருவேன் படமும் மோதவுள்ளது.

தாணு பாராட்டு
இதனிடையே இந்தப் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது சமீபத்திய பேட்டியில் பெருமை தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை தான் முழுமையாக பார்த்த பின்பு உடனடியாக செல்வராகவனைத்தான் பார்க்கப் போனதாகவும் இந்தப் படம் வெளியானவுடன் அதிகமான தயாரிப்பாளர்கள் அவரை அணுகுவார்கள் என்றும் ஆனால் அடுத்தப்படம் தன்னுடைய தயாரிப்பில்தான் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தென்றலாகவும்.. புயலாகவும்
தொடர்ந்து தனுஷை சந்தித்ததாகவும் அவருடைய நடிப்பு இந்தப் படத்தில் அதீதமாக இருந்தது குறித்து பாராட்டுத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் தென்றலாகவும் புயலாகவும் தனுஷ் பின்னிப் பெடலெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். படம் இன்னும் இரு தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.