அஜித்தால் விஜய்யின் வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்... கலக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜூ...

ஐதராபாத்: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கில் உருவாகும் வாரிசு படத்தை தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்திற்கு அடுத்தடுத்து பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

பொங்கல் ரேஸில் வாரிசு

பொங்கல் ரேஸில் வாரிசு

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே வாரிசு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் துணிவு

அஜித்தின் துணிவு

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு இதுஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் ரிலீஸை உறுதி செய்துவிட்டது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு மட்டும் தனியாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அஜித்தின் துணிவும் ரிலீஸாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில் ராஜூ கலக்கம்

தில் ராஜூ கலக்கம்

பொங்கலுக்கு வாரிசு மட்டுமே வெளியாகும் என்பதால் வசூலில் பஞ்சமிருக்காது என தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார். ஆனால் இப்போது அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு களமிறங்குவதால் வாரிசு படத்திற்கு எதிர்பார்த்தளவு திரையரங்குகள் கிடைப்பதே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் வாரிசு படத்தின் வசூல் ரொம்பவே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் - அஜித் இருவரின் படங்களும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் களமிறங்குவதால், போட்டி இன்னும் பலமாக இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில்தான் இப்படியென்றால் தெலுங்கிலும் வாரிசுக்கு பலத்தப் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

ஆதிபுருஷ், மெஹா 154

ஆதிபுருஷ், மெஹா 154

பொங்கலை முன்னிட்டு பிரபாஸின் 'ஆதிபுருஷ்', சிரஞ்சீவி நடிக்கும் 'மெகா 154' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸாகின்றன. தற்போது இந்த லிஸ்ட்டில் பாலக்ரிஷ்ணாவின் 'என்பிகே 107' படமும், அகில் அக்கினேனி, மம்மூட்டி இணைந்து நடிக்கும் 'அகில்ஸ் ஏஜென்ட்' படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 படங்களில் நிச்சயமாக 3 படங்கள் வெளியாகலாம் என்று டோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தமிழ், தெலுங்கு என இருபக்கங்களும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகவுள்ளது, வாரிசு படத்தின் வசூலை குறைத்துவிடும் என தயாரிப்பாளர் தில் ராஜு கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X