தளபதி 66 ஐதராபாத் ஷுட்டிங் முடிந்தது...போட்டோவுடன் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்
சென்னை : விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஐதராபாத் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, போட்டோவுடன் அப்டேட் வெளியிட்டுள்ளார். இதில் அப்டேட்டை விட போட்டோவை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கிறார். மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட்டு, சென்னையில் ஒரு சில நாட்கள் மட்டும் நடத்தப்பட்ட ஷுட்டிங்கில் சிறிய பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டது. ஏப்ரல் 6 ம் தேதி துவங்கப்பட்ட ஷுட்டிங் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது.

தளபதி 66 பொங்கல் ரிலீஸ்
இதுவரை நடத்தப்பட்ட ஷுட்டிங்கில் பாடல்கள் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும், இதுவரை சீன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. தளபதி 66 படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி 66 படத்தை 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இரண்டாவது ஹீரோயின் இவரா
தளபதி 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் என சொல்லப்பட்ட நிலையில், இரண்டாவது ஹீரோயினாக மெஹ்ரின் பிர்சோவா நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று சென்டிமென்ட் பாடல் என்றும், பாடல்களுக்கான இசை பணிகளை தமன் ஏற்கனவே முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

செம அப்டேட்டா இருக்கே
இந்நிலையில் நேற்றுடன் ஐதராபாத்தில் நடந்து வந்த ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் தில் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதோடு, பெரிய ஜன்னல் ஒன்றின் அருகில் விஜய்யுடன் தான் பேசிக் கொண்டிருப்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய்யை மெம ஸ்டையிலாக திரும்பி நிற்பது போலவும், அந்த பெரிய ஜன்னலில் தளபதி 66 என எழுதப்பட்டுள்ளது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

போஸ்டரை கொண்டாடும் ரசிகர்கள்
ஐதராபாத் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதால், அடுத்த கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்டு வரும் செட்டில் அடுத்தகட்ட ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாம். இங்கு தான் படத்தின் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம். ஐதராபாத் ஷுட்டிங் முடிந்து விட்டது என்ற தகவலை விட இந்த போஸ்டரை தான் ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகிறார்கள். இதனால் #Thalapathy66 ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











