»   »  'ஷோ காட்டுற பெண்களுக்கு எச்சரிக்கை..' - பொங்கி எழுந்த தயாரிப்பாளர் மனைவி!

'ஷோ காட்டுற பெண்களுக்கு எச்சரிக்கை..' - பொங்கி எழுந்த தயாரிப்பாளர் மனைவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், சூர்யாவின் குடும்ப நண்பருமானவர் ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா.

அவரது மனைவி நேஹா ஞானவேல்ராஜா, நடிகைகளைப் பற்றி பதிவிட்ட ட்வீட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

அந்த ட்வீட்டுகளை நீக்கிவிட்ட நேஹா, அதற்கு விளக்கம் அளித்தும், நடிகைகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் இன்னொரு ட்வீட் செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவருடைய மனைவி நேஹா ஞானவேல் ராஜா, சூர்யாவின் 'சிங்கம் 3' படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தவர்.

நேஹா ஞானவேல்ராஜா

நேஹா ஞானவேல்ராஜா

நேஹா ஞானவேல்ராஜா, நடிகைகளைப் பற்றி பதிவிட்ட சில ட்வீட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. "சில நடிகைகள் குடும்பத்தை உடைப்பவர்கள், அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள்.

சர்ச்சை ட்வீட் நீக்கம்

சர்ச்சை ட்வீட் நீக்கம்

படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய பட்டியலை வைத்திருக்கிறேன். விரைவில் அவர்களை வெளியேற்றுவேன்" என பதிவிட்டார். இது சர்ச்சையானதை தொடர்ந்து ட்வீட்டுகளை நீக்கிவிட்டார் நேஹா. அதன் பின் அதற்கான விளக்கத்தைக் கொடுத்து இன்னொரு ட்வீட் செய்திருக்கிறார்.

என் கணவருக்கு பிரச்னை இல்லை

"நான் பதிவிட்டது, என்னுடைய பிரச்னை அல்ல. எனக்கும், என் கணவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது என்னைச் சுற்றி பலருக்கு நடக்கும் விஷயங்கள். சில நடிகைகள் திருமணமானவர்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

கவன ஈர்ப்புக்கு அல்ல

கவன ஈர்ப்புக்கு அல்ல

ஒரு பெண் இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசினால், அதை எல்லோரும் 'லீக்' என்கிறார்கள். இங்கு கவனத்தை ஈர்க்க நான் இல்லை. எனது கணவரைப் பற்றி எனது ட்வீட்டுக்கு வரும் சில கமெண்ட்டுகள் என்னை பாதிக்கிறது. அதனால் அவற்றை நீக்குகிறேன்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சென்சிட்டிவ்வான பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நீக்குகிறேன். ஆனால், இப்படி ஷோ காட்டும் பெண்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக போய்ச் சேரும். சமூக வலைதளம் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, நல்ல வழியில் ஆதரவு கொடுங்கள்" என பதிவிட்டுள்ளார் நேஹா.

English summary
Neha GnanavelRaja, wife of K.E.Gnanaeval Raja, had a tough controversy with the tweets about actresses. Neha, who has removed those tweets, has clarified. Neha warns show women who targets married men.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X