twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா பட ரீமேக்கிற்கு இப்படி ஒரு சோதனையா... அப்படி என்ன தான் பிரச்சனை

    |

    மும்பை : இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. இந்த படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த சமயத்திலும், டிஜிட்டல் தளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை கண்ட படம் இது.

    அனைவரின் பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதுடன் ஓடிடி தளத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் பெற்றது சூரரைப் போற்று படம். பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் தேர்வு செய்யப்பட்ட இந்த படம், பல விருதுகளை வென்றது.

    சாதனை படைத்த சூரரைப் போற்று

    சாதனை படைத்த சூரரைப் போற்று

    ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இந்த படம், ஐடிபிஎம் இணையதளத்தில் சர்வதேச திரைப்பட பட்டியலில் டாப் 3 இடங்களில் இடம்பெற்றது. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.

    வாழ்க்கை படத்தில் சூர்யா

    வாழ்க்கை படத்தில் சூர்யா

    ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் சூரரைப் போற்று படம். மிக குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியப்பட வைக்க முயற்சிக்கும் இளைஞர் பற்றிய கதை.

     இவர்கள் தான் தயாரிப்பாளர்கள்

    இவர்கள் தான் தயாரிப்பாளர்கள்

    சூர்யா, அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, பர்வேஷ் ராவல், ஊர்வசி, கர்ணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் கனீத் மோங்காவின் சிக்யா என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.

    இந்தி ரீமேக்கை அறிவித்த சூர்யா

    இந்தி ரீமேக்கை அறிவித்த சூர்யா

    சூரரைப் போற்று படத்தின் பிரம்மாண்ட வெற்றி மற்றும் அடுத்தடுத்த சாதனைகளால் இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளதாக சில வாரங்களுக்கு முன் சூர்யா அறிவித்தார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. டைரக்டர் சுதா, ஜோதிகா, சூர்யா உள்ளிட்டோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தனர்.

    மாற்றப்பட்ட தயாரிப்பாளர்

    மாற்றப்பட்ட தயாரிப்பாளர்


    ஆனால் இந்தி ரீமேக்கை கனீத் மோங்காவிற்கு பதிலாக விக்ரம் மல்கோத்ராவின் அபுதாந்திதா என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாக சூர்யா தனது அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    யாரு தான் நடிக்க போறது

    யாரு தான் நடிக்க போறது

    சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூரை நடிக்க வைக்க முயற்சி நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் ரூ.30 கோடி சம்பளமும், படத்தின் வசூலில் பங்கு கேட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் சூர்யா நடித்த மாறன் கேரக்டரில் அக்ஷய் குமாரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    ரீமேக்கிற்கு தடையா

    ரீமேக்கிற்கு தடையா

    இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கனீத் மோங்கா, இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தி ரீமேக் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இத்தனை நாட்கள் கழித்து தற்போது இவர் வழக்கு போட என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    அப்படி என்ன பிரச்சனை

    அப்படி என்ன பிரச்சனை

    கனீத் மோங்கா தனது மனுவில், சூரரைப் போற்று படத்தை எந்த மொழியிலும் ரீமேக் செய்வது தொடர்பாக சூர்யாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஆனால் இந்த படத்தை ரீமேக் செய்ய வேறு ஒரு நிறுவனத்துடன் சூர்யா புதிய ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த ரீமேக் படத்தில் அக்ஷய் குமார் நடிப்பதாக வெளியான தகவல்களும் வதந்தியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Guneet monga who was the co producer of suriya's soorarai pottru tamil version approached court to seek stay for hindi remake. And declined the news that akshay kumar to be replaced in suriya's maran role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X