கேரவன்ல ஹீரோக்கள் குஜாலா இருக்காங்க.. அட்டகாசம் தாங்கமுடியல..கே.ராஜன் பரபரப்பு பேச்சு!

சென்னை : தயாரிப்பாளர் கே ராஜன், பெரிய ஹீரோக்கள் கேரவன்ல குஜாலாக இருப்பதாக பேசியது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அறிமுக இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ''நாட் ரீச்சபிள்''. இப்படத்தில் சுபா தேவராஜ், சாய் கான்யா என இரண்டு புதுமுக நாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சரண்குமார், ஒளிப்பதிவாளர் சுகுமார் சுந்தர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் கே.ராஜன்

தயாரிப்பாளர் கே.ராஜன்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார், இப்போது சினிமாவை காப்பாற்றுவது சிறிய பட தயாரிப்பாளர்கள் தான், பெரியப்பட தயாரிப்பாளர்கள் யாருமே சினிமாவை காப்பாற்றவில்லை. அது போல பெரிய பெரிய ஹீரோக்களும் சினிமாவை காப்பாற்றுவதில்லை அவங்க அவங்க பொழைக்க பாக்குறாங்க. அது மட்டும் இல்லாமல் தமிழ் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத், மும்பையில் நடத்தி தமிழக சினிமா தொழிலாளர்களின் வேலையை கெடுக்கிறார்கள்.

கேரவன்ல குஜால்

கேரவன்ல குஜால்

என்னை பொருத்தவரை சினிமா நன்றாக இருக்க வேண்டும், சினிமாவை நம்பி பணம் போட்டவர்கள் வாழவேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும் அவர்களுக்கு யாரும் துரோகம் பண்ணக்கூடாது. இந்த நடிகர்களுக்கு என்ன நோவு, நான் எல்லா நடிகர்களையும் தான் கேட்கிறேன். ஜாலியா ஜம்முன்னு ஏசி கார்ல வராங்க, கேரவன்ல ஜாலியா சீட்டு விளையாடுறாங்க அப்புறம் குஜால் பண்றாங்க. ஆனால் ஷாட் ரெடியாடுச்சுனு கூப்ட வருவதில்லை. போன் பண்ணி கூப்டாலும் வருவதில்லை.

தீவிரவாதியா நீ

தீவிரவாதியா நீ

எவன் வீட்டு காசுல கேரவன்ல உங்காந்துக்கிட்டு இப்படி அட்டகாசம் பண்றீங்க இதை நான் யாரை பற்றியும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இது எல்லாம் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது. ஒரு மணி நேரம் தாமதமானால் ஒரு தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவு தெரியுமா? கேரவன்ல இருந்து ஸ்பாட்க்கு வர்றதுக்கு பவுன்சர். மறுபடியும் கேரவனுக்கு போறதுக்கு பவுன்சர். அப்படி என்ன கெட்டது பண்ணிடீங்க.. தீவிரவாதியா நீ. இங்க தயாரிப்பாளர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை. தயாரிப்பாளரின் பணத்திற்குத்தான் பாதுகாப்பு இல்லை.

Recommended Video

K Bhagyaraj | TOOTH PASTE வைத்து குட்டி ஸ்டோரி | Senj Movie Audio Launch | *Kollywood
கதை தான் முக்கியம்

கதை தான் முக்கியம்

படம் எடுக்குறது பெரிய விஷயம் இல்லை. என்னமோ பண்ணி படத்தை எடுத்துறாங்க. ஆனா ரிலீஸ் பண்ண கஷ்டப்படுறாங்க. நல்ல படங்களை மக்கள் பார்க்க தயாரா இருக்காங்க. ஐம்பது லட்சம் சம்பளம் வாங்குற ஹீரோ நடிக்கிற படத்தை விட ஐந்து லட்சம் சம்பளம் வாங்குற ஹீரோ நடிக்கிற சின்ன பட்ஜெட் படங்களும் நல்லா ஓடுது. அதே மாதிரி இந்த நாட் ரிச்சபிள் படம் மக்கள் கிட்ட ரீச் ஆகும். கதை தான் முக்கியம். கதாநாயகர்கள் அல்ல. சிக்கனமா படம் எடுங்க என்று தயாரிப்பாளர் கே. ராஜன் அந்த விழாவில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X