Just In
- 39 min ago
காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
- 45 min ago
வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!
- 1 hr ago
ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
- 1 hr ago
650 கோடி விவகாரம்.. அனுராக், டாப்சியை வச்சு விளாசும் கங்கனா ரனாவத்.. வேற யாரும் வாயே திறக்கல!
Don't Miss!
- News
மக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்!
- Automobiles
விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!
- Finance
வார இறுதியிலும் வீழ்ச்சியில் தான் முடிவு.. சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவு..!
- Lifestyle
மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!
- Sports
ஜெர்ஸி நம்பரில் இப்படி ஒரு விளையாட்டா.... குறும்புக்கார ஹர்பஜன்... உண்மையை உடைத்த லக்ஷ்மணன்
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
சென்னை: நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்!
அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா உட்பட பலர் நடித்துள்ள படம், வெட்டி பசங்க.
இந்த படத்தை மஸ்தான் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நடிகர், நடிகைகள்
விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேசும்போது, நடிகர், நடிகைகள் அதிகம் செலவு வைப்பதாகக் கூறினார். அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். சில நடிகர், நடிகைகள் அதிக செலவு வைக்கிறார்கள்.

தங்கும் செலவுகள்
நடிகை நயன்தாரா, தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் வர வைக்கிறார். அவர்களுக்கு சம்பளம், விமான செலவு, ஓட்டலில் தங்கும் செலவுகளை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டி இருக்கிறது.

ஆடை வடிவமைப்பாளர்
அவரது மேக்கப் மேன், உதவியாளர்கள் உட்பட மொத்தம் 7 பேருக்கு தயாரிப்பாளர் ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்ய வேண்டி உள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் உதவியாளர்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவாகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்கிறார்.

தயாரிப்பாளர் நஷ்டம்
நடிகர்களும் தங்களுக்கான பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இப்படிப்பட்ட செலவுகள் குறைக்கப் பட்டால்தான் சினிமா வாழும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.வி.உதயகுமார்
விழாவில், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், போஸ் வெங்கட், சக்கரவர்த்தி, வாராகி, இசையமைப்பாளர் அம்ரீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரேகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.