Don't Miss!
- News
வாவ்! என்ன வாகனம்.. நின்ற இடத்தில் இருந்து அப்படியே பறந்த நபர்.. வியந்து பதிவிட்ட ஆனந்த் மகிந்திரா
- Sports
ஹர்திக் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.. இளம் வீரர்கள் செய்யும் மெகா தவறு.. கவுதம் கம்பீர் பேட்டி
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய்க்கு 100 கோடி ஓக்கே, ஆனால் அவரு அப்படி பண்ணலாமா..? அஜித்தை விளாசிய தயாரிப்பாளர் கே.ராஜன்
சென்னை: விஜய் - அஜித் இருவரும் வரும் பொங்கல் ரேஸில் நேருக்கு நேராக களமிறங்குகின்றனர்.
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான இருவருமே ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விஜய், அஜித் இருவரின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
துணிவு
நடிகருக்கு
சூப்பர்
கிஃப்ட்
கொடுத்த
அஜித்
குமார்..
பார்க்க
சும்மா
சூப்பர்
ஹீரோ
மாறி
இருக்காரே!

விஜய் - அஜித் போட்டா போட்டி
பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் இருவரது படங்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாரிசு, துணிவு திரைப்படங்களில் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும், எந்தப் படத்துக்கு அதிகமான திரையரங்குகள் என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனிடையே தற்போது இன்னொரு பஞ்சாயத்தும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

விஜய், அஜித் சம்பளம் 100 கோடி
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யும் அஜித்தும் ஆரம்பத்தில் குறைவாகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடிகளில் புரளும் அவர்கள், ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளரான கே ராஜன், கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் ஓக்கே தான், ஆனால் அஜித்துக்கு அது அதிகம் என கூறியுள்ளார்.

விஜய்க்கு 100 கோடி சம்பளம்
விஜய் ஏறகனவே 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அதேநேரம் அவரது படத்திற்கு வசூலும் நன்றாக உள்ளது. ஆனாலும், விஜய் 100 கோடி வரை சம்பளம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது தான். தயாரிப்பாளர்கள் கொடுப்பதால் அவர் வாங்குவதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் விஜய்க்கு 100 கோடி வரை சம்பளம் கொடுத்திருப்பது கஷ்டம் தான். அவங்க கொஞ்சம் குறைத்து தான் தருவாங்க, இதெல்லாம் நான் கேள்விப்பட்டது. இப்போது வாரிசு படத்திற்காக தெலுங்கு தயாரிப்பாளர் 120 கோடி வரை விஜய்க்கு சம்பளம் கொடுத்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அஜித்தும் 100 கோடி ரூபாய் வாங்கலாம் என நினைக்கிறார்.

அஜித்துக்கு மனசாட்சியே கிடையாது
அஜித்தின் 3 படம் தோல்வி ஆனபோதும் அவர் 100 கோடி சம்பளம் கேட்பது தவறு. விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என இந்த மூன்றுமே தோல்விப் படங்கள் தான். விஸ்வாசம் மட்டும் வசூலில் கொஞ்சம் கை கொடுத்தது. இதனை பார்த்த அஜித் சம்பளத்தில் 25 கோடி ரூபாய் குறைப்பது தான் நியாயம். 3 படங்கள் தோல்வியடைந்ததால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தால் நல்ல மனசாட்சி உள்ள மனிதராக இருந்திருப்பார். ஆனால், 3 படங்கள் தோல்வியடைந்தும் சம்பளத்தில் 40 கோடி ரூபாய் அதிகம் கேட்டுள்ளார் என்றால் அது என்ன மனசாட்சி என புரியவில்லை.

பழசை மறந்துவிட்டார்
நடிகர் அஜித்தை சந்திக்க ஒரு தயாரிப்பாளர் முயற்சி செய்துள்ளார். இத்தனைக்கும் அவர் ஏற்கனவே அஜித்தை வைத்து படம் பண்ண பழைய தயாரிப்பாளர் தான். அப்படிப்பட்ட தயாரிப்பாளரிடமே 95 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார் அஜித். 100 கோடி ரூபாய் சம்பளம் என்றால் உள்ளே வரச்சொல்லு, இல்லையென்றால் அப்படியே அனுப்பிவிடுங்கள் என அஜித் கூறியதாக அவர் தெரிவித்துள்ளாராம். வெற்றி பெற்றால் தான் சம்பளத்தை ஏற்றிக்கொள்வதென்றால் கடைசியாக வெளியான 3 படங்கள் தோல்வியடைந்துள்ளதை பற்றி யோசிக்க வேண்டாமா என தயாரிப்பாளர் கே ராஜன் பேசியுள்ளார்.

போனிகபூரையும் விட்டுவைக்கவில்லை
போனிகபூர் ஏற்கனவே நிறைய கடன்கள் இருப்பதால் தான், அஜித்தை வைத்து படம் தயாரிக்க தமிழ்நாட்டுக்கு வந்தார். அவரும் இப்போது அஜித்தை வைத்து படம் தயாரித்து நஷ்டம் அடைந்துவிட்டார். அடுத்ததாக அஜித் லைகா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறாராம். லைகாவும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம் தான். தமிழ்நாட்டில் படம் எடுக்கலாம் என்று லைகா நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை தமிழர். அவருக்காகவாவது சம்பளத்தை குறைத்து வாங்க வேண்டாமா என தயாரிப்பாளர் கே ராஜன் காட்டமாக பேசியுள்ளார்.