பயில்வான் ரங்கநாதனை அப்படி திட்டிய தயாரிப்பாளர் ராஜன்.. கமிஷனர் அலுவலகத்தில் திடீர் புகார்!

சென்னை: நடிகைகள் பற்றியும் திரையுலக பெண் கலைஞர்கள் பற்றியும் ஆபாசமாகவும் அவதூறாகவும் தொடர்ந்து பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

நேற்று நடந்த சினிமா திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் ஆத்திரப்பட்டு பயில்வான் ரங்கநாதனை படுமோசமாக திட்டி உள்ளார்.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் கே. ராஜன்.

நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பண்றாங்க

நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பண்றாங்க

புதிய படங்கள் கிடைப்பதற்காக முன்னணி நடிகைகள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் படுக்கையை பகிர்வதாக பச்சையாக பல நடிகைகளின் பெயர்களை சொல்லியே பயில்வான் ரங்கநாதன் ஏகப்பட்ட வீடியோக்களை யூடியூப் தளத்தில் போட்டு பேசி உள்ளார். ஓவியா, சின்மயி உள்ளிட்ட சிலர் மட்டுமே அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர்களை திட்டும் ராஜன்

நடிகர்களை திட்டும் ராஜன்

அதே போல சினிமா விழாக்களில் நடிகர்கள் விஜய், அஜித் பல கோடிகள் சம்பளமாக பெறுவது ஏன்? அவர்களால் தான் தமிழ் சினிமா அழிந்து கொண்டு இருக்கிறது என தொடர்ந்து நடிகர்களை டார்கெட் செய்து பட விழாவில் சர்ச்சையாக பேசுவதால் தொடர்ந்து அவரை அதற்காகவே சினிமா விழாக்களில் அழைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பணம் வாங்கிட்டு பேசுறாரு

பணம் வாங்கிட்டு பேசுறாரு

இந்நிலையில், நேற்று நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் பணம் வாங்கிக் கொண்டு தான் கே. ராஜன் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசி கன்டென்ட் கொடுத்து வருகிறார் என அவரது கோபத்தை தூண்டும் அளவுக்கு பேசினார். இதனால் கடுப்பான கே. ராஜன் "பன்னி" என பயில்வான் ரங்கநாதனை திட்டியதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

கே. ராஜன் ஆவேசம்

கே. ராஜன் ஆவேசம்

பயில்வான் ரங்கநாதன் என்னை காசு வாங்கிக்கொண்டு பேசுவதாக சொல்கிறார், ஆனால் நான் வாங்கும் பணம் ஏழை மாணவர்கள் படிப்புக்காக செலவிடுகிறேன் என ராஜன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். மேலும், பயில்வான் ரங்கநாதனை தரக்குறைவாக விமர்சித்தார், கே. ராஜன் இப்படி ஆவேசப்பட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பயில்வான் ரங்கநாதன் மீது புகார்

பயில்வான் ரங்கநாதன் மீது புகார்

சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பெண்கள் மீது அவதூறு பரப்பும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் கே. ராஜன். இருவருக்கும் இடையே வெடித்துள்ள மோதல் எங்கே போய் முடியப் போகிறது என்கிற கவலையில் கோலிவுட் உள்ளது. சம்பந்தப்பட்ட நடிகைகளே இதுவரை பயில்வன் ரங்கநாதனுக்கு எதிராக புகார் கொடுக்க ஏன் முன் வரவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X