Don't Miss!
- News
குறுகலான சந்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்.. வயிற்றில் சொருகிய ‘அடிபம்பு’ கைப்பிடி.. கொடூரம்!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
விஜய்யை சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றது ஓவர்... பிரதீப் ரங்கநாதன் தான் நம்பர் 1: கடுப்பான கே ராஜன்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன.
முன்னதாக விஜய் தான் கோலிவுட்டின் டாப் ஹீரோ என வாரிசு தயாரிப்பாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என புகழந்தார் சரத்குமார்.
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் அனல் பறந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் கே ராஜன் இதுகுறித்து விமர்சித்துள்ளார்.
அதிரடி மாற்றங்களுடன் ஏகே 62... அஜித்துடன் மோதும் அரவிந்த் சாமி... ஹீரோயின் லிஸ்ட்டில் இவங்களா?

விஜய்யை புகழ்பாடும் பிரபலங்கள்
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் ரசிகர்களும் அவருக்கு மிகப் பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு படமும் 11ம் தேதி வெளியாகிறது. முன்னதாக விஜய் தான் கோலிவுட்டின் டாப் ஹீரோ, அதனால் வாரிசு படத்துக்கு தான் அதிகம் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜூ பேட்டி கொடுத்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் விஜய்
விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என்ற தில் ராஜூவின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மிகப் பெரிய விவாதமே நடந்தது. ஆனால், இதெல்லாம் அடங்கும் முன்னரே அடுத்து ஒரு வெடியை கொளுத்திப் போட்டார் சரத்குமார். வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக் கூறி ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டார். நம்பர் 1 நடிகர் விஜய் என்ற பரபரப்பை விடவும், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இன்னும் பற்ற வைத்தது. விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அனைவரும் இதுபற்றி சோஷியல் மீடியாக்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

கடுப்பான தயாரிப்பாளர் கே ராஜன்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் கே ராஜன், விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், கடின உழைப்பால் பல வெற்றிகளை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் ரஜினிகாந்த். தனது படங்களின் மூலம் தயாரிப்பாளர்களை காப்பற்றியதால் அவர் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்டார். அவர் படங்களை தயாரித்து நஷ்டமடைந்தவர்கள் வெறும் 2 சதவீதம் பேர் தான். ஒருவேளை நஷ்டம் ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து உதவும் நல்ல எண்ணம் கொண்டவர் அவர். அதனால் தான் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினி என கொண்டாடப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

இதெல்லாம் ரொம்ப ஓவர்
அப்படியான ர்ஜினி இன்னும் திரைத்துறையில் இருக்கும்போதே விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு இணையான வேறொரு பெயரை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். இப்போதும் அவர் சுப்ரீம் ஸ்டார் தான். அப்படி இருக்கும்போது விஜய்யை எப்படி சூப்பர் ஸ்டார் என சொல்லலாம். விஜய் முன்பு அவரை புகழ்வது தவறிவல்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் என்று புகழ்வதை தவிர்க்க வேண்டும். நம்பர் 1 என்பது நிலையானதல்ல. அற்புதமான படத்தை எந்த இயக்குநர் தருகிறாரோ, அதன் மூலம் கிடைக்கும் வெற்றிதான் நம்பர் 1. ஹீரோ எல்லாம் ஒன்றும் கிடையாது. இயக்குந்ர் தான் எல்லாவற்றுக்கும் காரணம். படத்தை வெற்றி பெற வைப்பதே அவர்கள் தான் என கடுமையாக பேசியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் தான் நம்பர் 1
விஜய் தான் நம்பர் 1 நடிகர் என்றால் அவர் நடித்த எல்லா படங்களும் ஓடியிருக்க வேண்டும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் அஜித் இருவரும் சமம் தான். பிகில் வலிமை விவேகம் மெர்சல் ஆகிய படங்கள் தோல்வியைச் சந்தித்தன. மெர்சல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களால் அதன்பிறகு ஒரு படம் கூட தயாரிக்க முடியவில்லை. அப்புறம் எப்படி விஜய் நம்பர் 1 ஆக முடியும். 6 கோடியில் லவ்டுடே படத்தை எடுத்து, அதை 100 கோடி கலெக்ஷன் செய்ய வைத்த பிரதீப் ரங்கநாதன் தான் இப்போது நம்பர் 1 என கே ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். கே.ராஜனின் இந்த பேட்டியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் விஜய் 100 கோடி சம்பளம் வாங்குவது நியாயம் தான், அஜித்துக்கு அது ஓவர் என கே ராஜன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.