Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
3 வருஷத்துக்கு முன்னாடி நடிச்ச படத்துக்கு இன்னமும் டப்பிங் பேசல.. பிரபல நடிகரை விளாசிய தயாரிப்பாளர்!
சென்னை: மூன்று வருடங்களுக்கு முன்பு நடித்த படத்திற்கு இன்னமும் டப்பிங் பேசாமல் இழுத்தடிக்கிறார் என பிரபல நடிகர் மீது தயாரிப்பாளர் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏராளமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இன்று முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
தனது பாடி லாங்குவேஜ், டைமிங் சென்ஸ் உள்ளிட்டவற்றால் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்திருக்கிறார் யோகி பாபு.

பரியேறும் பெருமாள்
ராஜபாட்டை, கலகலப்பு, அட்டக்கத்தி, வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை, இந்தியா பாகிஸ்தான், கொம்பன், காக்கா முட்டை, டீமாண்டி காலணி, வேதாளம், ஆண்டவன் கட்டளை, ஜாக்சன் துரை, ரெமோ, மெர்சல் கலகலப்பு 2, குலேபகாவலி, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி விஜய் அஜித்
ஜாக்பாட், கோமாளி, நம்ம வீட்டு பிள்ளை, பெட்ரோமாக்ஸ், பிகில், இருட்டு, தனுசு ராசி நேயர்களே, தர்பார், டகால்டி, நான் சிரித்தால் என பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார் யோகிபாபு.

பரமபதம் புரமோஷன்
தற்போது அஜித்துடன் மீண்டும் இணைந்து வலிமை படத்தில் நடிக்கிறார். இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் அறிவித்திருக்கிறார் யோகி பாபு. இந்நிலையில் யோகி பாபு மீது தயாரிப்பாளர் கே ராஜன், சரமாரி குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அதாவது சென்னை ராயப்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பரமபதம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

தோல்விக்கு காரணம்
இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கே.ராஜன், 'ஒரு படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இயக்குநர் தான் முழுக்காரணம். நடிகர்கள் ஆரம்பத்திலிருப்பது போலவே இறுதிவரை இருக்க வேண்டும். ஒரு மரம், நட்டவர்க்கும், நாட்டு மக்களுக்கும் பயன் தருகிறது. மனிதன் மட்டுமே யாருக்கும் உதவுவதில்லை.

இழுத்தடிக்கிறார்
சினிமா உலகில் தன்னை வளர்த்தவர்களை மறந்து விடுகிறார்கள். வளர்ந்த பிறகு தங்களை வளர்த்துவிட்டவர்களை கொஞ்சமும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. நடிகர் யோகி பாபு மூன்று வருடங்களுக்கு முன்பு நடித்த படத்திற்கு இன்னமும் டப்பிங் பேசாமல் இழுத்தடிக்கிறார். அவர் விரைவில் அந்த படத்திற்கு டப்பிங் பேச வேண்டும். ஆனால் நடிகர் சந்தானம் தயாரிப்பாளருக்கு உதவி செய்திருக்கிறார். அவருக்கு நன்றி. இவ்வாறு தயாரிப்பாளர் கே ராஜன் பேசியுள்ளார்.
Recommended Video

பரபரப்பு
தற்போது பிஸியாக உள்ள நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபுதான். அவருடைய கால்ஷீட் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் இயக்குநர்கள். இந்நிலையில் வளர்ந்த பிறகு வளர்த்துவிட்டவர்களை மதிப்பதில்லை என்ற ரீதியில் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யோகி பாபுவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.