விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை..தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறீர்கள்..கே.ராஜன் விளாசல்!
சென்னை : நடிகர் விஜய்க்கு ஆந்திராவில் 35 சதவீத தியேட்டர் தான் கிடைக்கும், அவருக்கு அங்கு அவ்வளவு தான் மரியாதை என தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.
ஆனால், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

அதிக சம்பளம் ஏன்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கே ராஜன் வாரிசு பட பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அதில், வாரிசு படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் தெலுங்கு. அங்குள்ள ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது, தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்து தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறார்கள். இனி இந்த ஹீரோ தமிழ் தயாரிப்பாளரிடம் 25 கோடிக்கு கம்மியா வாங்குவாரா? என்றார்.

வாரிசு நேரடி டப்பிங் படம்
வாரிசு படம் தெலுங்கில் நிச்சயம் ரிலீஸ் ஆகும். வாரிசு திரைப்படம் டப்பிங் படம் தான் நேரடி தெலுங்கு திரைப்படம் இல்லை. ஆந்திராவில் வாரிசு படம் 35 சதவீத தியேட்டரில் தான் வெளியாகும், விஜய்க்கு அங்கு அவ்வளவுதான் மரியாதை. தமிழகத்தில் அஜித்துக்கு 50 சதவீத தியேட்டரும், விஜய்க்கு 50 சதவீத தியேட்டரும் கிடைக்கும், இரண்டு படமும் இங்கு நல்லா ஓடும்.

நடிகர்களுக்கு தமிழ் பற்று இல்லை
நடிகர்களுக்கு தமிழ் நாட்டில் பற்று கிடையாது, தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தமிழ் ஹீரோக்கள் ஆந்திரா பக்கம் போனதே தப்பு. தமிழ் ஹீரோக்கள் தமிழ் தயாரிப்பாளர்களை முதலில காப்பாற்றுங்கள் அதன் பிறகு தெலுங்கு தயாரிப்பாளர்களை காப்பாற்றலாம்.

தயவு செய்து திருந்துகள்
பல கோடி சம்பளம் தருகிறார்கள் என்று ஐதராபாத், மும்பையில் ஷூட்டிங் வைத்துக் கொள்கிறீர்களே அப்போ இங்கே சினிமாவை நம்பி இருக்கும் 25 ஆயிரம் தொழிலாளர்களின் கதி என்ன. பாட்டில் மட்டும் தமிழ் பற்று இருந்தால் போதுமா? அனைத்து தமிழ் ஹீரோக்களும் திருந்தி தமிழ் மண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருங்கள் என்று உணர்ச்சியுடன் பேசினார் தயாரிப்பாளர் கே ராஜன்.


Click it and Unblock the Notifications











