twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீரனாக இருந்தால்.. விஜய்க்கு தயாரிப்பாளர் கே. ராஜன் சவால்.. தொடரும் எதிர்ப்பு குரல் ஏன்?

    |

    சென்னை: தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு தொடர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றும் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    வீரனாக இருந்தால் என நடிகர் விஜய்க்கு அவர் சவால் விடுத்திருக்கும் வீடியோவை நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பீஸ்ட் படத்தின் சொதப்பல் காரணமாக தொடர்ந்து ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பு குரல்கள் நடிகர் விஜய்க்கு எதிராக அதிகரித்துள்ளது.

    மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்திய படங்கள்.. ஆர்.ஆர்.ஆர்.ஐ பின்னுக்கு தள்ளிய பீஸ்ட்!மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்திய படங்கள்.. ஆர்.ஆர்.ஆர்.ஐ பின்னுக்கு தள்ளிய பீஸ்ட்!

    ஹீரோவுக்காக படம் பண்ணக் கூடாது

    ஹீரோவுக்காக படம் பண்ணக் கூடாது

    ஹீரோவுக்காக படம் பண்ணும் நிலை மாற வேண்டும் என்றும், நல்ல கதைக்கு ஏற்பத்தான் ஹீரோக்களை போட வேண்டுமே தவிர ஹீரோவுக்காக படம் எடுத்தால் அது குப்பையாகத் தான் இருக்கும் எனக் கூறியுள்ளார். சக் தே இந்தியா அதற்கு ஒரு உதாரணம். அதை விட்டு விட்டு பிகில் படத்தில் சர்ச்சில் நயன்தாரா விஜய்யை சைட் அடிப்பது, காலேஜ் கிளாஸ்க்குள் ஒரு ரவுடி பைக்கில் வருவது போன்றும், கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்டோர் இருக்கும் இடத்தில் ரவுடி ராயப்பன் ஒருவரை அடிப்பதை போன்ற அபத்த காட்சிகளை ஏன் படமாக்குகின்றனர் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.

    வீரனாக இருந்தால்

    வீரனாக இருந்தால்

    அந்த அளவுக்கு வீரனாக இருந்தால், நெய்வேலியில் வருமான வரித்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தங்கள் காரில் விஜய்யை ஏற்றிச் செல்லும் போது, எகிறி குதித்து தனது ஹீரோயிசத்தை காட்டி இருக்க வேண்டியது தானே என ரொம்பவும் ,மட்டம் தட்டும் விதமாக கே. ராஜன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    200 கோடி 300 கோடி ஏன்

    200 கோடி 300 கோடி ஏன்

    சினிமா படங்களை தயாரிக்க 200 கோடி 300 கோடி என வீண் செலவு செய்ய என்ன தேவை இருக்கிறது என்றும் ஹீரோக்கள் 100 கோடிக்கும் மேல் ஏன் சம்பளம் கேட்கின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இவர்களை போன்றவர்களால் தான் நல்ல தரமான சினிமா தமிழ்நாட்டில் உருவாகவில்லை என்றூம் கே. ராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    Recommended Video

    Beast | Vijayயின் தந்தை S.A.Chandrasekarரின் Open talk | அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ஏகப்பட்ட பேர் நெகட்டிவ் கமெண்ட்டுகளை நடிகர் விஜய் மீது தொடர்ந்து அடுக்கி வருகின்றனர். தமிழ் சினிமா அழியக் காரணமே விஜய் தான் என்கிற ரீதியில் பேசி வருகின்றனர். ஆனால், அதற்கு மாறாக தியேட்டர் உரிமையாளர்கள் கஷ்ட காலத்தில் சினிமாவை வாழ வைத்து வருபவர் விஜய் தான் என்றும் ஓடிடி பக்கம் பெரிய நடிகர்கள் ஓடினாலும், சினிமாவுக்காக தியேட்டர் ரிலீஸை அறிவித்தவர் விஜய் என்றும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Producer K Rajan slams Vijay in a interview stirs controversy in Kollywood. He slams Vijay with very harsh comments.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X