Don't Miss!
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம்.. காதலுக்கு உருவம் தடையில்லை என நிரூபிக்கும் ரவீந்தர்!
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற திரைப் பிரபலங்களின் திருமணங்களில் முக்கியமான கவனத்தை பெற்ற ஜோடி என்றால் அது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிதான்.
ஃபேட் மேன் என்ற பெயரை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை, சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம் செய்தது எந்தக் காரணத்திற்காக என்பதை தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே, தங்களது திருமணத்திற்கு காதல் மட்டுமே காரணம் என்பதை தொடர்ந்து இந்த ஜோடி பல்வேறு தருணங்களில் நிரூபித்து வருகிறது.
Bigg
Boss
Tamil
6:
யார்
சொன்னாலும்
கேட்க
மாட்டேன்..
ஆதிவாசி
அசீம்
அட்டகாசம்..
அடக்கிய
விக்ரமன்!

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் மற்றும் மகாலட்சுமிக்கு ஒரு மகனும் உள்ள நிலையில், இந்தத் திருமணம் தொடர்ந்து பேசு பொருளானது. இதுமட்டுமில்லாமல் ஃபேட் மேன் என்ற பெயரெடுத்துள்ள ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்தாரா என்ற கேள்வியும் எழுந்தது.

ட்ரெண்டிங்கில் ஜோடி
இவர்கள் இருவரும் இணைந்து தங்களது திருமணத்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர். இவர்கள் எதை செய்தாலும் அதை இணையதளத்தில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கினர். தொடர்ந்து இவர்கள் தங்களது காதல், திருமணம், முந்தைய வாழ்க்கை, தற்போதைய வாழ்க்கை என பல விஷயங்களை பல்வேறு பேட்டிகள் மூலம் பகிர்ந்தனர். இதனால் இவர்களின் திருமணம் தொடர்ந்து விவாதத்திற்கு உட்பட்டது.

ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி
இவர்களது திருமணம் சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வெளிப்படையாக சொல்லாமல் நடந்த நிலையில், திருமணம் முடிந்தவுடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் ரவீந்தர். இப்படி யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக நடத்த காரணம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த அனைத்து விஷயங்களையும் இந்த ஜோடி புன்னகையுடனே எதிர்கொண்டது.

ரொமான்ஸ் புகைப்படம்
இதனிடையே தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மகாலட்சுமி குறித்த பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார் ரவீந்தர். மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் உண்மையில் மகாலட்சுமிதான் என்று பல்வேறு தருணங்களில் பகிர்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே தற்போது ரவீந்தர் வெளியிட்டுள்ள பதிவில், இருவரும் ரொமாண்டிக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கனவுகளுக்கு அப்பாற்பட்டவர்
மேலும் மகாலட்சுமியுடன் வாழும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தான் முன்னதாக கனவு கண்டதில்லை என்றும் அவரை எப்படி மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் யோசித்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகாலட்சுமியுடன் வாழ்வதற்கு கனவு அவசியமில்லை என்றும் அவர் கனவுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
ரவீந்தரின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களை கடந்த நிலையிலும் இவர்களது காதல் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. இதனால் உருவத்தை பார்க்காமல் மனதை பார்த்து ஒன்று சேர்ந்துள்ள இவர்கள் இதே போல மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.