twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5,000 ஏழைகளுக்கு.. ஒரு மாத மளிகை பொருட்கள்.. வழங்கிய தயாரிப்பாளர்!

    |

    சென்னை: 5 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை வீடு வீடுடாக சென்று வழங்கினார் தயாரிப்பாளர் எஸ்.தணிகைவேல்.

    Recommended Video

    களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்.. தினக் கூலிகளின் பட்டினியை போக்க மாஸ் நடவடிக்கை! - வீடியோ

    ஆர். எஸ். எஸ். எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

    Producer S. Thanigaivel donated

    இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக்குடும்பங்களுக்கு ஒரு மாதத்திகு தேவையான மாளிகை பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர்.

    Producer S. Thanigaivel donated

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன.

    Producer S. Thanigaivel donated

    அந்த வகையில் திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர், வேங்கிக்கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள அய்யம்பாளையம், இராஜபாளையம், ஆடையூர் செங்கம் அருகிலுள்ள குளியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை ஆர்.எஸ்.எஸ்.எஸ் இந்நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.தணிகைவேல் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்கினார்.

    ஹாலிவுட்டை கலங்கடித்த கொரோனா.. ஒரே அடியா ரிலீஸ் தேதியை மாற்றிய படங்கள்.. நொந்துப்போன ரசிகர்கள்!ஹாலிவுட்டை கலங்கடித்த கொரோனா.. ஒரே அடியா ரிலீஸ் தேதியை மாற்றிய படங்கள்.. நொந்துப்போன ரசிகர்கள்!

    Producer S. Thanigaivel donated

    வீடு வீடாக இந்த இலவச மாளிகை பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச மாளிகை பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் தொழிலதிபர் எஸ்.தணிகைவேல் சார்பில் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    English summary
    Producer S. Thanigaivel donated 5000 Grocery items to the poor
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X