»   »  சந்தோஷத்தில் அருண்ராஜா.. தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஓவர்!

சந்தோஷத்தில் அருண்ராஜா.. தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஓவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஓவர்!- வீடியோ

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளராகி தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் முடிவடைந்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் நெருப்புடா பாடலை பாடி பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகராக இருந்து வந்த அவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். இந்தப் படத்தைத்தான் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.

Producer sivakarthikeyans film shooting

தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க, சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா வேடத்தில் நடித்துள்ளார். ஒரு இளம்பெண் கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்க எதிர்கொள்ளும் சிரமங்களே இந்தப் படத்தின் ஒன்லைன் கதை.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடிக்க அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

திரையுலக ஸ்ட்ரைக் முடிந்ததும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார் அருண்ராஜா. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

English summary
Sivakarthikeyan officially produces his friend Arunraja Kamaraj's film. The first schedule shooting of this film has recently completed says, Arunraja Kamaraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X